
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ, வர்த்திகா,
சேத்தன், மாளவிகா அவினாஷ் , தஃபியா அபு, முனிஷ்காந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன, தீபா வெங்கட், மா.கா.பா மற்றும் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் ராம் அண்ட் லீலா.
திருமண வயதைத் தாண்டியும் பெண் கிடைக்காமல் தவிக்கும் கதாநாயகன் ரியோவை,
வர்த்திகா ஒரு நிபந்தனையுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார்.. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு காதலைத் தொடர்கிறார். அந்த நிபந்தனையே அவர்கள் காதலில் சிக்கலை ஏற்படுத்த , அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தைக் கண்டறிய ரியோ முடிவு செய்கிறார். வர்த்திகாவுக்கு எதிர்பாராத ஒரு பிரச்சனை இருப்பது தெரியவருகிறது. அந்தப் பிரச்சனை என்ன, அதை அறிந்த பிறகும் ரியோ வர்த்திகாவைத் தொடர்ந்து காதலிக்கிறாரா, இறுதியில் திருமணம் நடக்கிறதா என்பதே படத்தின் மீதிக்கதை.
ரியோ நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் தனது புதிய பரிமாணத்தைக் காட்ட முயன்றுள்ளார். பெண்கள் உலகைப் பற்றி அறியாத ஒரு அப்பாவி மனிதனாக நடித்து, தனது உடல் மொழியால் ரசிகர்களை சிரிக்க வைக்க முயல்கிறார். அவருடைய பல குறும்புகளும் விளையாட்டுத்தனமான சைகைகளும் சிவகார்த்திகேயனின் ஆரம்பகால திரைப்பயணத்தை நினைவூட்டுகின்றன. காதலுக்கான ஏக்கம், எதிர்பாராத நெருக்கடி மற்றும் அதைத் தீர்ப்பதற்கான போராட்டம் என ரியோவின் நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்தாலும், சில இடங்களில் அவரது நடிப்பு சற்று மிகையாகத் தெரிகிறது.
கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள வர்த்திகா வெள்ள்ளா வில் வைத்து வெளுத்த மாதிரி பள பள என தெரிகிறார். நடிப்பிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். துணை நடிகர்களான ஆகியோர் தங்களுக்குரிய பாத்திரங்களுக்குச் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் அழகாக படம்பிடித்துள்ளார். கதாநாயகியை அழகாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் காட்டுவதில் அவர் தனி கவனம் செலுத்தியுள்ளார்,
அங்கித் மேனனின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையிலும் உள்ளது..
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் படத்தின், கலகலப்பான படத்தை கோடுத்து அசத்ததியுள்ளார்.
