ஹரிஷ் கல்யாண் ஐ வைத்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தினை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் இளன் தற்போது ’பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் மூலம் நாயகனாவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இரு மனம் ஒத்த காதல் அடுத்து திருமணத்தில் முடிய, அதற்கு பிறகு, இணையும் இரு குடும்ப உறவுகளை பற்றியும், உறவுகளால் பாதிப்பு காதலர்களுக்கா? அவரின் பெற்றோர்களுக்கா என்று  வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துள்ள இளனின் பார்வையில்  பியார் பிரேமா கல்யாணம்.

கல்யாணம் முடிந்த கையோடு, புதுப்பெண் பவித்ரா (சான்வி மேக்னா) கணவனுடன் புகுந்து வீட்டுக்கு செல்லாமல் ஓட்டம் பிடிக்கிறார். குழப்பமடைந்த கணவன் இளன்  அவரை துரத்துகிறார்.  . சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான  ‘பர்ப்பிள் பவி’ என்ற பவித்ராவின் வாழ்க்கை
பெற்றோர், தாத்தா, வளர்ப்பு நாய் என எல்லாரையும் கவனித்துக்கொண்டு தன் பொறுப்புகளை அன்போடு செய்யும் பவியை, தற்செயலாக தனக்கு பார்த்திருக்கும்  மணமகள் என்று நினைத்து, அவளிடம் பேச, அதை எடுத்து இன்ஸ்டா வில் போட இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்து திருமணம் வரை போகிறது…ஏற்கனவே இளன், துபாயில் வேலை பார்க்கும் சிவில் இன்ஜினியர். அம்மாவின் மொறுமொறு தோசைக்காக வேலையை விட்டுவிட்டு ஓடிவரும் அளவுக்கு குடும்பத்தின் மேல் பாசம்..இந்த இருவருக்கும் இடையே தொடங்கும் காதல், திருமணமாக மாறும்போது முக்கியமான சிக்கல் எழ, அதாவது திருமணமாகி புகுந்த வீட்டுக்கு யார் செல்வது என்று குழம்ப, அதிலிருந்து இருவரும் எப்படி மீண்டனர் என்பதே படத்தின் கதை.

இளன்,  இயக்குனர் அவதாரத்தையும் ஐ தாண்டி, கதாநாயகனாக நடித்திருக்கிறார்.. வெகுளித்தனமான அவரது நடிப்பு  சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
சான்வி மேக்னா, இளன் ஜோடி பொருத்தம் கச்சிதம்..வழக்கம் போல ராதிகா சரத்குமார் கலக்கியுள்ளார்..

எம்.எஸ்.பாஸ்கர்,கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு. செந்தில், யோகிபாபு, மாறன் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ‘கலர்புல்’. இசை -யுவன் சங்கர் ராஜா படத்திற்கு பலம் சேர்க்க பியார் பிரேமா கல்யாணம் சண்டை சச்சரவுகள் அன்பு,பாசம் நிறைந்த கூட்டுக் குடும்பம்..