
சங்ககிரி ராஜ்குமார் தானே நடித்து இயக்கி இருக்கும் படம் “ஒன்”
கதை, திரைக்கதை வசனம், நடிப்பு, இசை எடிட்டிங், சிஜி இப்படி 26 கிராப்ட்களையும் கற்று அத்தனையும் ஒரே படத்தில் கொடுத்து தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நான்கு நண்பர்கள் ஒரு கார் டிரைவர் என ஐந்து நபர்கள் பயணத்து ஒரு இரவுக்குள் திரும்பி விடுவதாக கதை.. ஒரு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பாக, ஒரு உயிரினம் கூட இல்லாமல் உலகம் அழிந்துவிடும் அபாயகரமான கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறதுஅந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று அந்த நான்கு நண்பர்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருவர் யாருமில்லாத உலகில் தனி ஆளாக வாழ துடிக்கிறார். மற்றவர்கள் அதற்கு ஒத்துழைக்காமல் போகவே, அவர்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை.
படத்தில் இடம்பெற்ற நான்கு நண்பர்கள் விஞ்ஞானி, அம்மா, ஓட்டுநர் இப்படி அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தானே நடித்து, அதனை மற்றொரு கேமராவில் படம் பிடித்து நமக்கு காட்டி இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
சற்றும் எதிர்பாராத இடைவேளை ரயில் சேசிங் காட்சிகள். அட என்று நம்மளையே வியக்க வைக்கிறது சங்ககிரி ராஜ்குமாரின் படைப்பு.. கட்டாயமாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்
