
விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரித்து p.s. வினோத் ராஜ் இயக்கி ott இல் வெளியாகியிருக்கும் படம் கூழாங்கல்….
வணிகவியல் படத்திற்கு நடுவே ஒரு குடும்ப வன்முறை….
குடி பழக்கத்திற்கு அடிமையான குடிமகன் கணபதி…சண்டையிட்டு தாய் வீ்டிற்கு சென்றிற்க்கும் தன் மனைவி யை. அழைத்து வர மகனோடு செல்கிறான்…
அவரோடும் கேமிரா வோடும் சேர்ந்து நாமும் நீ…..ண்ட தூரம் செல்கின்றோம்…
மணைவி அங்கில்லை என்று தெரிந்து வீடு திரும்ப …மகன் அப்பாவின் மேல் உள்ள கோபத்தால் பணத்தை கிழித்து விட..பொட்டல் காட்டு வழியே நடந்தே …மகனும் கணபதி யும் வீடு திரும்புகிறார்கள்..
கோபத்தோடு வீடு திரும்பும் கணபதி… தாகத்தை போக்கி..பசியினை போக்கி மகனை பார்க்க …கொஞ்சம் நிதானதுக்கு வர…நாமும் அப்பாடா என்று கொஞ்சம் இளைப்பாருகிரோம்….
கிடைக்கும் சந்தர்பங்களில்..அப்பா வினை பழி வாங்கும் சிறுவன் வேலுவின் சேட்டை..
அழகு….
ஒரு குடம் தண்ணிக்கு தவிக்கும் மக்கள் ஒரு புறம் இருக்க…நாய் ஒன்று cola பாட்டில் ஒன்றை உருட்ட….குடும்ப வன்முறைக்கு நடுவே கொஞ்சம் அரசியல் பேசுகிறது …கூழாங்கல்…