யுவராஜ் கணேசன் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்து வெளியாகி இருக்கும் படம் “ஒன்ஸ்மோர்”

வழக்கமான கல்லூரி கால காதல் தோல்வி கதை.. காதல் தோல்வி யில், அதில் நடந்த நிகழ்வுகள் வடுவாக மாறி, வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு சிவில் என்ஜினீயர் ரகு (அர்ஜுன் தாஸ்). பல வருடங்களுக்குப் பிறகு அவரை தற்செயலாகச் சந்திக்கும் அஞ்சலி (அதிதி ஷங்கர்), பார்த்த வேகத்திலேயே தன் காதலை வெளிப்படுத்துகிறார். முதலில் ரகு அதை மறுத்தாலும், அஞ்சலி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்க ஒரு வழியாக மீண்டும் காதலில் விழுகிறார். கடந்த காலத் துயரங்களை மறந்து, ரகு தன் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை (Once More) காதலிக்க அது கல்யாணத்தில் முடிந்ததா முன்னாள் காதலியின் நிலைமை என்ன என்பதுதான் படத்தின் மையக்கதை.

அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான காந்தக் குரலாலும், கடந்த கால வலியால் தவிக்கும் எமோஷனல் நடிப்பாலும் ரகு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

துள்ளலான, வாயாடிப் பெண் கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது மிகச்சிறந்த நடிப்பு.

ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, மணி ரத்னம் – கௌதம் மேனன் படங்களின் உணர்வைத் தருகிறது.

இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். ஒரு அழகான காதல் கதையை கொடுத் திருக்கிறார்.. பழக்கப்பட்ட ஒரு காதல் கதைக்களமாக இருந்தாலும், நல்ல இசை, துடிப்பான முதல் பாதி மற்றும் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கரின் சிறப்பான நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்