
ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் எல்ட்ரட்குமார் அவர்களின் தயாரிப்பில் சூரி,சுஹாஸ், மஹிமா நம்பியார் நடித்து வெளிவந்திருக்கும் படம் “மண்டாடி”
ராமநாதபுரத்தின் கடலோர கிராமமான முகவைப்பட்டினத்தில் மாரி (மிதுன் ஜெய் சங்கர்) என்ற இளைஞருக்கும், சாட்டப்புலி என்கிற தெலுங்கு நடிகர் சுஹாஸ்) அவரின் மகனுக்கும் சண்டை வர, சொந்த ஊருலிருந்து சென்னைக்கு தன் பெண் தோழியால் அனுப்ப படுகிறார். சென்னையில் ஒரு தீம் பார்க்கில் செக்யூரிட்டி கார்ட் ஆக வேலை பார்க்கும் சூரி(முத்துக்காளி) அவருக்கு அடைக்கலம் தர, மறுபுறம் படகுப் போட்டியையும், அணிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வாக்குமிக்க சாட்டப்புலி, தன் ஆட்களை சென்னைக்கு அனுப்பி மாரியைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார். அதிலிருந்து மாரி யை காப்பாற்றிய
முத்துக்காளி, அவனை கைபிடித்து அவரும் சொந்த ஊருக்கு கிளம்ப, முத்துக்காளி ஏன் மாரி யை காப்பாற்றுகிறார் அதன் பின்புலம் என்ன என்பதே மண்டாடி..
தமிழ் சினிமாவில் பல ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் வந்திருந்தாலும், இதுவரை திரையில் அதிகம் காட்டப்படாத, ஒரு புதிய விளையாட்டு உலகுக்குள் நம்மை அழைத்துச் சென்று அதன் வரலாறு, தனித்துவம் என்ன என்பதையும் மேலும்
படகுப் போட்டி க்கான விதி முறைகள், வியூகங்கள் தொடர்பான காட்சிகளை மிக நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
கதையின் நாயகனாகச் சூரி. ஒற்றை ஆளாக முழு படத்தையும் தன் தோளில் தாங்கி உள்ளார்.. தனது பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாகப் புரிந்து, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பினை கொடுத்துள்ளார். இப்படத்தின் மூலம் ஒரு மாஸ் நடிகராக வலுவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சூரி இல்லையேல் இப்படம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு உடல்மொழியுடன் கூடி தன் திறமையையும் நிரூப்பித்துள்ளார்..
தெலுங்கு நடிகரான சுஹாஸ், வில்லத்தனத்தை நடிப்பில் கொண்டு வந்து சாட்டாப்புலி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி’ மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்
பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூவின் சண்டைக் காட்சி பேச வைக்கிறது
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம்.
ஜிவி பிரகாஷின் இசை படத்துடன் ஒன்ற வைக்க, மண்டாடி ரேசில் முந்தி செல்கிறது
