உங்கள் ஜெயா தொலைக்காட்சியில் 15 வருடங்களுக்கு முன் உற்சாகமாக வந்த குஷ்பு மீண்டும் அதே எனர்ஜியோடும் புத்துணர்ச்சியோடும் ரீ-என்ட்ரீ தரப்போகிறார்.

சில நிகழ்ச்சிகள் வெறும் பொழுதுபோக்குடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.
ஒரு காலகட்டத்தின் நினைவாகவும், குடும்பங்களின் கொண்டாட்டமாகவும் மாறிவிடும். அப்படி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான். ‘ஜாக்பாட்’.

பழைய ஜாக்பாட்டின் இனிமையான நினைவுகளையும், இன்றைய தலைமுறையின் ரசனையையும் ஒன்றாக இணைத்து, புத்தம் புதிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரங்கம், புத்தம் புதிய சுற்றுகள், எதிர்பாராத சவால்கள் என ஒவ்வொரு கட்டத்திலும் புதுமையும் விறுவிறுப்பும் காத்திருக்கிறது.

இந்த முறை போட்டி மூன்று அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியாக அமைகிறது. கணவன்–மனைவி, நண்பர்கள் என எந்த உறவாக இருந்தாலும் ஒரு அணியாக இணைந்து போட்டியில் பங்கேற்கலாம். இதனால் போட்டியில் அறிவு மட்டுமின்றி, இந்த சமூகத்தை பற்றியும் தமிழர்களின் வாழ்வியல், கலாசாரம் எண்ணவோட்டங்கள், விருப்பு வெறுப்புகள் என எந்த அளவிற்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் அளிக்கும் பதில்கள் மூலம் சுவாரஸ்யம் கலந்த உணர்வுகளை அளிக்கிறது.

ஒவ்வொரு சுற்றிலும் போட்டியின் சுவாரஸ்யமும் சவாலும் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் புதுமையான கேள்விகள், வேகத்தைச் சோதிக்கும் போட்டிகள், எதிர்பாராத திருப்பங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒரு சுற்றில் முன்னிலையில் இருக்கும் அணி, அடுத்த சுற்றிலேயே பின்னுக்குத் தள்ளப்படும் சூழலும் உருவாகலாம். இதனால் கடைசி நிமிடம் வரை எந்த அணி வெற்றிபெறும் என்பதை கணிப்பதே சவாலாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில் இந்த புதிய ஜாக்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டி மேலும் சூடுபிடித்து, இறுதியில் ரூ.10 லட்சம் வரை வெல்லும் வாய்ப்புடன், பல்வேறு சிறப்புப் பரிசுகளும் போட்டியாளர்களுக்காக காத்திருக்கின்றன.
அதிலும், இறுதிச்சுற்றில் இடம்பெறவுள்ள AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய பிரத்யேக சவால், இந்த புதிய ஜாக்பாட்டின் முக்கிய சுவாரஸ்யங்களில் ஒன்றாக இருக்கும். அந்தச் சுற்றில் போட்டியாளர்களுக்கு என்ன சவால் காத்திருக்கிறது? இறுதியில் எந்த அணி வெற்றியைத் தட்டிச் செல்லும்? என்பதற்கான பதில் நிகழ்ச்சியைப் பார்க்கும்போதுதான் தெரியும்.
இந்த முறை பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஜாக்பாட் மேடையில் போட்டியாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

அதுமட்டுமின்றி, வீட்டிலிருந்து நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களும் வாட்ஸாப் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து, ஜாக்பாட் விளையாட்டில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

கடந்த முறை குஷ்புவின் ஜாக்கெட் டிசைன் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய ஒரு முக்கியமான பேசுபொருளாக மாறியது.
அதேபோல், இந்த முறையும் குஷ்புவின் உடை மற்றும் குறிப்பாக அவரது ஜாக்கெட் டிசைன் மிகவும் ஸ்பெஷலாகவும், தனித்துவமாகவும் இருக்கும். இந்த முறை அந்த பிரத்யேகமான ஜாக்கெட் டிசைனை பூர்ணிமா பாக்கியராஜ் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு… பழைய நினைவுகளுடன், புதிய தலைமுறையின் ரசனைக்கேற்ப, முற்றிலும் புதிய நிகழ்ச்சியாக.

வரும் செப்டம்பர் 13 முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் மீண்டும் வருகிறது ‘ஜாக்பாட்’.