
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹைக்கூ’,
முதல் காதல் தோல்வியடைந்த பிறகு அவர்களின் வாழ்க்கை முறை, அதே சமயம் அடுத்த காதல் வாழ்க்கைக்குள் நுழைய, முதல் காதலில் செய்த தவறு அடுத்த காதலை பாதிக்காதவாறு அதை லாவகமாக எவ்வாறு நகர்த்துவது? காதலில் ஈகோவும் பொசசிவ்னஸும் எந்த அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்? என்பதே ‘ஹைக்கூ’
தனியார் ஐடி நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறார் ஏகன். இவருடன் பணிபுரியும் நிவேதா (ஃபெமினா ஜார்ஜ்), தனது காதலனால் ஏற்படும் பிரச்சனைகளால் மனதளவில் பாதிக்கப்பட்டு தவித்து வருகையில்
நிவேதாவின் நிலையை புரிந்து ஏகன், அவருக்கு பக்க பலமாக நிற்கிறார்..
அதே சமயம் தனது கடந்த கால காதல் கதையை அவரிடம் பகிர,
பெண்கள் அதிகம் படிக்கும் கல்லூரியில் மாணவனாக சேரும் ஏகன், பெண்களிடம் பேசுவதற்கே கூச்சப்படும் இளைஞனாக இருக்க
அந்த கல்லூரியில் படிக்கும் கொடி (ஸ்ரீதேவி அப்பல்லா) மீது அவருக்கு காதல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் தொடங்கும் இந்த காதல், நாளடைவில் நெருக்கமாக
சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காதலில் ஏற்படும் ஈகோவும், புரிதல் இல்லாத சூழ்நிலைகளும் இவர்களை பிரிவை நோக்கி அழைத்துச் செல்கிறது.
ஏகனின் கடந்த காலத்தை அறிந்து கொள்ளும் நிவேதா, அவரது குணங்களை புரிந்து கொண்டு அவரை காதலிக்கத் தொடங்குகிறார்.
ஏகனும் நிவேதாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அந்த காதலில் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதை நிவேதா உணர்கிறார்.
தன்னை காதலிப்பதாக சொல்லும் ஏகனால் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்த நிவேதா, தனது சுயமரியாதைக்காக ஏகனை விட்டு விலக முடிவு செய்கிறார்.
முதல் காதலில் நடந்தது என்ன? ஏகனின் மனதில் இன்னும் கொடி இருக்கிறாரா? ஏகன் நிவேதா ஒன்று சேர்ந்தனரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஏகன், கல்லூரி மாணவனாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
கொடியாக வரும் ஸ்ரீதேவி, கண்களால் கவிதை எழுதுகிறார்..நல்ல நடிப்பு..
நிவேதாவாக நடித்திருக்கும் ஃபெமினா ஜார்ஜ், ஆரம்பத்தில், டாக்ஸிக் காதலால் அவஸ்தை படும் இடத்திலும், .
பின்னர் ஏகனின் நல்ல குணங்களை புரிந்து கொண்டு அவரை காதலிக்கத் தொடங்கும் இடங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பெரிய பலம்.
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, வழக்கமான காதல் கதையை எடுத்துக் கொண்டு அதற்குள் மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளையும், உருகி உருகி காதலித்தாலும் பெண்ணுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் எண பதிவு செய்ததற்காக அவரை பாராட்டலாம்
