
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் ஹாரர் படம் தான் ‘418’.
கர்நாடகால இருக்குற ஒரு மெடிக்கல் காலேஜ்ல, படிக்கிற ஸ்டூடண்ட்ஸுக்கு பக்கத்தில் இருக்கிற பழைய பில்டிங் ஐ ஹாஸ்டல் ரூம் ஆக ஒதுக்குறாங்க. அவங்களுக்கு கொடுத்த ரூமுக்கு பக்கத்துல இருக்குற 418வது ரூமை மட்டும் திறக்கவே கூடாது என்ற கண்டிப்புடன் அனுப்ப, ஸ்டுடென்ட்ஸ் ம் அங்கு தங்குகிறார்கள்..அங்கு தங்கிய சில நாட்களிலேயே, விவேக் தங்கியிருக்கும் 417 வது ரூமில் அமானுஷ்ய நிகழ்வுகளை அனுபவிக்கத் தொடங்குகிறான்
இதற்கிடையில். சிலர் மர்மமான முறையிலும் இறந்து போறாங்க.
அந்த ஹாஸ்டல், இதற்கு முன்னாடி ஒரு மனநல காப்பகமாக இருந்ததாகவும், அங்கு சில கொலைகள் நடந்துள்ளதாகவும் செய்தி கள் வரவே, இவ் விஷயம் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில பரவ அது அவர்களின் பயத்தை மேலும் அதிகரித்து விடுகிறது..
418வது ரூமுக்கு பின்னாடி இருக்குற மர்மம் என்ன? என்பதே இப் படத்தின் கதை.
தினேஷ் திவாகரனின் ஒளிப்பதிவு படத்தின் திகில் நிறைந்த கதைக்கேற்ப சிறப்பாகவும் அதே சமயம் வெங்கீ ஜி.ஜி-யின் இசை அந்தத் திகிலுக்கு வலுவும் சேர்க்கிறது
வித்தியாசமான, மிரட்டலான ஹாரர் எக்ஸ்பீரியன்ஸை எதிர்பார்த்து தியேட்டருக்கு வர்றவங்களுக்கு நல்லா சாய்ஸ் ஆக இருக்கும் இப்படம்…
