
எம் எம் ஸ்டுடியோஸ் சார்பில் மூர்த்தி தயாரித்து தீரன் அருண்குமார் எழுதி இயக்கி, வெற்றி , பிரியா லயா , லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், ஏ.வெங்கடேஷ், ராமர், அருள் டி சங்கர், துளசி, நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் பிளாக் கோல்ட்..
விலை மதிப்புடைய முடி வியாபாரம் செய்யும் இரண்டு தாதாக்களுக்குள் ( வெங்கடேஷ்- அருள் சங்கர்) பகை .
இது ஒரு புறம் இருக்க இரண்டு தரப்பிடமும் காசு பார்க்கும் போலீஸ் அதிகாரி ( தயாரிப்பாளர் மூர்த்தி)
தாதாக்களில் ஒருவரான (வெங்கடேஷ்) நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர் ( லிவிங்ஸ்டன்) மனைவி மகள் மற்றும் மகன் வெற்றி என அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வில் குறுக்கே ஒரு கொள்ளை கும்பல் நுழைய, வெற்றி யின் தந்தை காணமல் போகிறார்..லாரி
முதலாளி யோ, ” உன் அப்பா சரக்கை கடத்தி கொண்டு போய் ஏமாற்றி விட்டார்” என்று குற்றம் சாட்ட, தன் அப்பாவின் நேர்மையை நிலை நாட்ட போராடும் கதை யே. பிளாக் கோல்ட்…
வழக்கம்போல வெற்றி கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க
காய்கறி விற்று நோட்டம் பார்த்து கொடூர கொலை மற்றும் கொள்ளை செய்யும் கேரக்டரில், மிரட்டுகிறார் கராத்தே வெங்கடேசன்..
அப்பாவி அப்பாவாக லிவிங்ஸ்டன். சிறப்பு
தீரன் அருண்குமார் விறு விறுப்பான திரைக்கதை அமைக்க
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் தனது பின்னணி இசையால் படத்துக்கு பலம் சேர்க்க,
சந்தோஷ் குமார் வீரசாமியின் ஒளிப்பதிவும் மேலும் பக்க பலமாக இருந்தது..
சிறு பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, நல்ல திரைக்கதை கொண்ட படங்களை பார்க்கலாம்.
