
‘கே.டி’ (K.D.) படத்தை இயக்கிய மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ்,சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, சாரா, ஜெயபிரகாஷ் நடித்து வெளிவந்திருக்கும் படம்
‘ஜான் டோ’ (John Doe).
அர்ஜுன் தாஸ் முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்
தமிழகத்தின் மலை கிராமம் ஒன்றிற்கு துபாய் லிருந்து ஸ்ருஷ்டி தன் டீனேஜ் மகள், லக்கி மற்றும் 8 வயது மகன் ஹ்ருதய் உடன் வந்து குடியேறுகிறார். ஹ்ருதய் ஒரு நாள் திடீரென காணாமல் போக, இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கிகிறார் காவல் துறை அதிகாரி சஞ்சனா நடராஜன். ஆரம்பத்தில் சாதாரணமாக Missing case-ஆக தோன்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் இருப்பதைக் கண்டறிகின்றனர். மறுபுறம் அர்ஜூன் தாஸ் ஒரு கார் விபத்து குறித்த வழக்கை விசாரிக்க துவங்குகிறார். அது பல குழந்தைகளின் மாயம் மற்றும் தொடர் கொலைகளுடன் தொடர்புடையதாக இருக்கவே, இந்த இரண்டு வழக்குகளும் ஒரு புள்ளியில் இணைய, அர்ஜூன் தாஸூம் சஞ்சனாவும் இணைந்து வழக்கை முடிக்க முயற்சிக்கிறார்கள். அந்த வழக்க்கு என்ன ஆனது? இந்த குற்ற சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்? என்பதே இந்த “ஜான் டோ” படத்தின் கதை.
கேரள போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தாஸ் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். தமிழகக் காவல்துறை அதிகாரியாக சஞ்சனா நடராஜன் கம்பீரமான நடிப்பையும், உளவியல் நிபுணராக கார்த்திக் குமார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக தர்ஷனா கதாபாத்திரத்தில் ஸ்ருஷ்டி என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
ஜாரா வினீத் சந்தோக் முதல் படத்திலேயே குறிப்பிடத்தக்க ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜெயபிரகாஷ், அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோரும் சில காட்சிகள் வந்தாலும் படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார்கள்.
ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பகுதிகள் மற்றும் நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகளில் த்ரில்லர் உணர்வைக் கூட்டுகிறது. முஜீப் மஜீத் மற்றும் ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை கதையின் விறுவிறுப்புக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. இரண்டு வெவ்வேறு இடங்களில் நடக்கும் விசாரணைகளைக் குழப்பமில்லாமல் விஜய் வெங்கடரமணன் நேர்த்தியாகத் தொகுத்துள்ளார்.
காணாமல் போகும் குழந்தைகள் அதை தொடர்ந்து நிகழும் தொடர் கொலைகள், காவல்துறை விசாரணை, அதிகாரியின் மனப் போராட்டம் என பல அடுக்குகளை கொண்ட கதையை உளவியல் ரீதியில் மிக சுவாரஸ்யமாக அணுகியிருக்கிறார் இயக்குனர் மதுமிதா.
உணர்வுப்பூர்வமான க்ரைம் த்ரில்லர்களை விரும்புபவர்களுக்கு ‘ஜான் டோ’ ஒரு சிறந்த படம்
