
பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ்,, மிஷ்கின், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சத்தியவான் சாவித்திரி..
இசை – சாம் சி.எஸ்..
இளம் வழக்கறிஞரான சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்), தான் தொழில் கற்றுக்கொள்ள மூத்த வழக்கறிஞர் மிஷ்கின் னிடம் உதவியாளராக சேருகிறார்..
அவருடான ஈகோ மோதலுக்குப் பிறகு, கொலை வழக்கில் சிக்கிய தன் கணவரைக் (சாருகேஷ்) காப்பாற்ற அதே மூத்த வழக்கறிஞரை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. புராண கால சாவித்திரியைப் போல் தன் கணவரைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
கீர்த்தி சுரேஷ் வெகுளித்தனத்தையும் புத்திசாலித்தனத்தையும் சமநிலையில் வெளிப்படுத்தி, படத்தைத் தன் தோளில் சுமந்துள்ளார். மிஷ்கின் நீதிமன்றக் காட்சிகளில் கீர்த்தி சுரேஷுக்குச் சரியான போட்டியாக மிளிர்கிறார்.
ஜூனியர் வழக்கறிஞராக வரும் பாலசரவணனின் காமெடி அழுத்தமான நேரத்திலும் சிரிக்க வைக்கின்றது.
சாருகேஷ் கீர்த்தி சுரேஷின் கணவராக, மிக இயல்பாக, எந்தவித பதட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார். சீரியல் நடிப்பு கை கொடுத்திருக்கிறது..
ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா இருவருமே சின்ன கதாபாத்திரம் என்றால் அழுத்தமான, கவனத்தை ஈர்க்கின்ற கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். மதுசூதனராவ், சுந்தர்ராஜன், மாலா பார்வதி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாகவே கதைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு ஏற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார். அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு
கலர்ஃபுல்லாகவும், காட்சிகளில் உணர்வுகளையும் அழகாக கொண்டு வந்திருக்கிறது. ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பும் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு துணை புரிகின்றது.
இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் சத்தியவான் சாவித்திரி கதையை ஒரு சிறப்பான ட்ராமா படத்தை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்.
அசத்தலான கிளைமாக்ஸ்.
