பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜூட் ஆனந்த் தயாரிக்க, ரஜித் மேனன், தீப்ஷிகா , நக்க்ஷா சரண் , வி.ஜே. பப்பு, ஜி எம் குமார் நடிப்பில் வி ஜே. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கி இருக்கும் படம் ” சிட்டுக்குறிஞ்சி”

வத்தலகுண்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து கொடைக்கானல் மலை பகுதிக்கு காட்டிலாக்க அதிகாரியை சந்திக்க செல்கிறார் நாயகன் ரஜித் மேனன்.
அவருக்குண்டான அறையை உடனே தர முடியாத காரணத்தினால் மலை உச்சியில் இருக்கும் தெரிந்த தம்பதியினர் இருக்கும் வீட்டிற்கு அனுப்ப, அங்கே அவளின் கணவன் வெளியூர் சென்றிருப்பதால் மனைவி மட்டும் இருக்க அவர்களும் ரஜித் திற்கு உணவு சமைத்து நன்றாக கவனிக்கிறாள்..
சொந்த ஊருக்கு சென்ற சில மாதங்கள் கழித்து, மறுபடியும் கொடைக்கானல் பகுதி யில் அந்த பெண்ணை தேடி வர, அந்த பெண்ணோ இவர் யாரென்றே தனக்கு தெரியாது என்று சொல்லிவிட, அந்த ஊர் மக்களும் சேர்ந்து குழம்புகிறார்கள்…அதோடு அவனுக்கு ப்ராந்து (பயித்தியம்) என்று பட்டம் கட்ட, குழம்பி போன அவன்… முன்று சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று தேட, அந்த பழைய வீட்டின் இடிபா டுகளுக்கு நடுவில் ஒரு போட்டோ கிடைக்க அதில் கல்யாண கோலத்தில் அவனும் இன்னொரு பெண்ணும் இருக்க அதிர்கிறான்… அதன் மர்மம் என்ன என்பதே மீத கதை..

நாயகனான ரஜித் மேனன் மலையாள வாசனை இருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி வேரி யேஷன் குடுத்து தன்னால் முடிந்த நடிப்பை நன்றாகவே வெளிப் படுத்தியிருக்கிறார்.

முதல் பாதியில் வரும் நக் சரண் அலட்டால் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகி தீப்ஷிகா கண்களால் கவிதை சொல்கிறார்.. நல்ல நடிப்பும் கூட.

ஊர் பெரியவராக வரும் ஜி. எம். குமார், சுஜாதா, ஹலோ கந்தசாமி போன்றோர் சிறப்பாகவே நடித்துள்ளனர்..

இமிபிசாகினாலும் கதை புரியாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும், நேர்த்தியாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் வி. ஜே. மீனாட்சி சுந்தரம்.

மலையும் மலை சார்ந்த இடங்களையும் அழகாக படம் பிடித்து கா ட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார். 
மொத்தத்தில் சிட்டு குறிஞ்சி திரைப்படம் மர்மமான நாவல்..