பிளாஸ்டிக் சர்ஜரி யில் எக்ஸ்பர்ட் டாக்டர் ஆக லண்டன் ..ல் வாழும் ரிஷி ..தன் மனைவி (புன்னகை பூ கீதா ) க்கு தெரியாமல் காதிலித்து வரும் யாஷிகா வை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருக்கும் வேளை யில்மனைவி யின் டெலிபோன் கால் வருகிறது…இன்னும் அரை மணி நேரத்தில் தோழிகளுடன் வீட்டிற்கு வருவேன் என்று சொல்லும் மனைவிக்கு தெரியாமல் காதலியான யாஷிகாவை சமையல் அறை யின் மற்றொரு கதவின் வழியாக வெளியே போக சொல்லி, அனுப்பிய வுடன்….வீட்டினை சரி செய்து…பின் யாஷிகா சென்று விட்டாளா என்று செக் செய்ய…அவள் இறந்து கிடக்கிறாள் ..

ஒரு வழியாக பிணத்தை மறைத்து அப்புறப்படுத்தி புதைக்க…. அங்கிருந்து, பத பதைப்புடன்…குற்ற உணர்ச்சியும் சேர …மன இறுக்கத்துடன் ரிச்சர்ட் இருப்பதை கண்டு…மனைவி யும் காரணம் கேட்க…ரிச்சர்ட் மழுப்பலான பதிலை சொல்லிவிட்டு நகருகிறார்

ரிச்சர்ட் செய்த குற்றத்தை கண்டு பிடித்த பெண் ஒருத்தி அவரை மிரட்ட….வேறு வழியில்லாமல் ஒரு கட்டத்தில் தன் மனைவியிடம் , தான் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு இருந்ததை சொல்லிவிடுகிறார் ரிச்சர்ட்…அதிலிருந்து கணவனை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தன் மீதி கதை….

காதலியாக வரும் யாஷிகா, ரிச்சர்ட் உடன் ஆன நெருக்கம் ..உண்மையாக காதலிக்கிறார்களோ என்று என்னும் அளவிற்கு அத்தனை நெருக்கம்…

குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு மனைவியாக வரும் கீதா ..அந்த கதாபாத்திரத்துக்கு இயன்ற அளவிற்கு உயிர் ஊட்டிர்க்காரு..மேலும் இறுதி காட்சி மற்றொரு பரிணாமத்தை வெளிப்படுத்தி விட்ட வாழ்க்கை யை மீண்டும் தொடங்க கணவனை ஆயுத்தபடுத்தும் இடம் அருமை..

லண்டன் ன் அழகை அருமையாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன்… ரோஹித் குல்கர்னி யின்பின்னணி இசையில் ..மர்டர் மிஸ்ட்ரி யை குறுகிய நேரத்தில், நுணுக்கத்தோடு இயக்கியிருக்கிறர் இயக்குனர் வினய் பரத்வாஜ்

சில நொடிகளில்
கன கச்சிதம்….