

குடியிருந்த கோயில்.. ஓர் பார்வை
குடியிருந்த கோயில்.. ஓர் பார்வை
யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்குனர் அருள் செழியன் இயக்கி வெளியாகிருக்கும் படம் குய்கோ….யோகி பாபுவுடன் விதார்த்,இளவரசு,முத்துகுமார், ஶ்ரீ பிரியங்கா, துர்கா ஆகியோர் நடிச்சிருகாங்க ..அந்தோணிதாசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி பிரியங்காவின் பாட்டி தவறவிட…துபாயில் இருக்கும் அவரது மகன் அதாவது யோகிபபு விற்கு சேதி சொல்ல….அவர் ஊர்காரர் இளவரசு விடம் தான் வரும் வரை அம்மாவின் சடலத்தை பாதுகாக்க சொல்லுகிறார்…
பைனான்சியர் முத்துகுமாரின் மச்சான் விதார்த் திடம், பிரீசெர் பாக்ஸ் ஐ கொடுத்தனுப்ப….விதார்த் தும் கிராமத்திற்கு செல்ல நேரிடுகிறது….இளவரசு வின் வேண்டுதலுக்கு இணங்கி அந்த ஊரிலேயே ,யோகிபாபு வரும் வரை தங்க நேரிடுகிறது….
கிராமத்தில் மாடு மேய்க்கும் யோகி பாபு விற்கும்…அதே ஊரைச் சேர்ந்த முத்து மாரிக்கும் காதல் ஏற்பட..,முத்து மாரி யின் அண்ணன் …பெண் குடுக்க மறுக்க…யோகி பாபு துபாய் வேலைக்கு சென்று விடுகிறார்….
இந்நிலையில் தான் யோகி பாபு வின் அம்மா இறந்து விட…அவர் துபாய் யில் இருந்து திரும்பி வர…என்ன நடக்கிறது என்பது மீதி கதை…
25 வருட காலம் பத்திரிக்கை துறையில் இருந்த அனுபவம் இயக்குனர் ன், தெளிவான வசனத்தில் தெரிகிறது .. தமிழக அரசியலை நுணுக்கமாக தெரிந்து வைத்திருக்கும் சிலரால் மட்டுமே, இயக்குனர்,- ன் நக்கல் நையாண்டி வசனங்களையும் அதன் அர்த்தங்களையும் புரிந்து கொள்ள முடியும்…ஒரு வார்த்தைய கவனிக்க தவறிினால் கூட..அர்த்தம் புரிந்து சிரிக்க தவறி விடுவோம்…
படத்தின் முதல் பாதி யதார்த்தத்தை தழுவி சென்றாலும்.. இரண்டாம் பாதி நம்மை சிரிப்பலையில் தள்ளி விடுகிறது…
யோகி பாபு சிறந்த தேர்வு..
பெரிய ஹீரோக்களுக்குத் தான்…. கதை என்று சுற்றி திரியும் பல இயக்குனர்களுக்கு நடுவில்…எனக்கு என் கதை தான் ஹீரோ. டா.. என துணிந்து இயக்கியிருக்கும், இயக்குனர் அருள் செழியனுக்கு ஒரு சபாஷ்…
இன்னும் கொஞ்சம் புரோமோஷன் ல் .. சிரத்தை எடுத்திருந்தால்..இந்த வாரம் மக்களின் மனதில் குடியமர்ந்திருக்கும்…. இந்த குயிக் கோ.
