

அஃறஹாரத்து மாமி ஆம்பூர் பிரியாணி சமைத்து , இந்தியாவின் தலை சிறந்த சமயல் நிபுணராக ஆவது தான் ” அன்னபூரணி “
நயன்தாரா வுடன் சத்யராஜ் , ஜெய், கார்த்திக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் கே.எஸ். ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா அச்யத் குமார் ஆகியோர் நடிக்க,
நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இசை – s. தமன்
ஒளிப்பதிவு – சத்யம் சூரியன்
ஶ்ரீ ரங்கம் மடப்பள்ளியில் சமைத்து பெருமாள் க்கு சேவை செய்யும் தகப்பனாரின் மகளான அன்ன பூரணி க்கு, ( நயன்தாரா) சிறுவயதில் இருந்தே உணவை ருசி பார்த்து அதன் தரத்தை உணரும் தன்மை இவருக்கு கொஞ்சம் அதிகமாக இருக்க ,சமைக்கும் தொழில் மேல் ஆசை, ஆர்வம், ஈடுபாடு ஏற்பட, இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் எனும் எண்ணம், லட்சியமாக மாறுகிறது. தனது குடும்பத்தின் எதிர்ப்பை யும் மீறி கேட்டரிங் காலேஜ் ல் படிக்க, அவருக்கு உதவுகிறார் ..வேறு மதத்தை சார்ந்த ரிஸ்வான்
ஆகிய ( ஜெய் ).
தனது இலட்சியத்திற்காக சைவ த்திலிருந்து அசைவத்தி ற்கு, மாறஅவரது நண்பர்கள் உதவுகிறார்கள்
அன்ன பூரணி தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா? என்னது தான் அன்னபூரணி.
படத்தின் இரண்டாம் பாதியில், விபத்திற்கு பின் வரும் சிக்கல் , தனக்கு சுவைக்கும் தன்மை போனதை அறிந்து தவிக்கும் தவிப்பு, அப்பாவிடம் வரும் இயலாமை கலந்த கோபம். பின் சத்யராஜ்- டம் கலங்குவது, என கிடைத்த அத்தனை இடங்களிலும் நயன் தன் நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருக்கார்.
அவரது அப்பாவாக வரும் அச்யத் குமாரும் சில இடத்தில் ,நடித்தும் இருக்க
அனைத்து இடங்களிலும் நயன் இருப்பதால் ஜெய் ன் பங்கு பெரிதளவில் இல்லை
பெண்கள் அனைத்து துறையிலும் முன் நிற்க வேண்டும் என்ற கருத்தை., முன்னிறுத்தி ….தன்னம்பிக்கை தருவதால் அன்னபூரணி நிற்பாள்…
