ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்து வெளிவந்திருக்கும் படம் “ஆயிரம் பொற்காசுகள்”

இப் படத்தில் விதார்த்,  (சித்தப்பு) சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் அருந்ததி நாயர், வணக்கம் கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஜோஹன் சிவனேஷ்.
 

அரசாங்கத்தில் கொடுக்கும் அணைத்து வகையான இலவசங்களை- யும் பெற்று, வேலை வெட்டி எதும் செய்யாமல், அண்ட வீடு கோழிகளை திருடி உண்னும் சோம்பேறித்தனமான வாழ்கையை வாழும் , குடி மகனாக சரவணன் இருக்க, இவரது அக்கா வோ – தன் மகனான விதார்த் தை சில நாட்கள் அவருடன் தங்க வைத்து கொள்ளுமாறு கேட்கிறார்…. மத்திய அரசின் இலவச கழிப்பறை திட்டம் அந்த ஊருக்குள் வர , கழிப்பறை கட்டுவதாக பொய் சொல்லி அந்த பணத்தை வாங்கி, தின்றே செலவழித்து விடுகிறார்கள். எதிர் வீட்டுக்கார-ரின் கழிப்பறையை காண்பித்து சரவணன் ஏமாற்ற, ஊர் தலைவரும் ஒரு வழியாக மூன்று நாட்களுக்குள் அவருக்கான கழிப்பறையை கட்டி கொடுக்க வேண்டும் என்று சொல்லி ப்ரச்சினை யை முடிக்கிறார்…அதனால் சரவணன் மற்றும் விதார்த் அவர்களது வீட்டின் ஒரு பகுதியில் கழிப்பறை கட்ட குழி தோண்ட, ஜார்ஜ் மரியான் &கோ வை நியமிக்கிறார்., ஜார்ஜ் மரியான்& கோ வும் குழியை தோண்ட, பொற்காசுகள் இருக்கும் பானை தட்டுபடுகிறது….இதனை கண்ட சரவணன், விதார்த், மற்றும் ஜார்ஜ் ஆகிய மூன்று பேரும் அதனை பங்கு போட திட்டமிடுகின்றனர். அதில் பல குளறுபடிகள் ஏற்படவே
இந்த விஷயம் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிய, அதனால் ஏற்படும் கலவரங்களுக்கு பிறகு அந்த ஆயிரம் பொற்காசுகளும் யார் கையில் போய் சேருகிறது என்பதே படத்தின் மீதி கதை.

கிராம மக்களின் யதார்த்த வாழ்க்கையை அழகான திரைக்கதையை கொண்டு எழுதி இயக்கியிருக்கிறர் இயக்குநர் ரவி முருகையா.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை நகைச்சுவையை தவிர வேறு ஒன்றுமில்லை, எந்த இடத்திலும் சீரியஸ் கதையோ, காதல் காவியமோ எமோஷனல் டிராமாவோ குடுக்காமல் முழுக்க முழுக்க படு காமெடியாக நகர்கிறது ஆயிரம் பொற்காசுகள்..

விதார்த் – தான் நாயகன் என்ற போதிலும், அதற்குண்டான இமேஜ் ஐ பொருத்தி கொள்ளாமல், தன்னுடன் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடிக்க வழி விட்டு, வழக்கம் போல யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்காரு… அதிலும், படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையோடு பயணித்து, காட்சிக்கு காட்சி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ்-ன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கு.

படத்தொகுப்பாளர்கள் ராம் மற்றும் சதீஷ் எந்த இடத்திலும் சிறு தொய்வு இல்லாமல் காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றி ருக்கிறார்கள்.

புதையலை மையமாக வைத்து நகரும் கதை என்றாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்தி சென்றிருப்பது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி புதையல்.