
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கததில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரதகுமார் அம்ரிதா ஐயர், சமுத்திரகனி ஆகியோரின் நடிப்பில் வெளயாகியிருக்கும் படம் ஹனுமன் வில்லனாக வினய் ராய் நடிச்சிறுக்காரு..
பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் கார்ட்டூன்களின் தாக்கத்தால், உந்தப்பட்டு எப்படியும் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்று பேராசைப் படும் மைக்கெல் (வினய்) ஒரு பக்கம் இருக்க, வளர்ச்சி அடையாத கிராமத்தில் தனது அக்காவுடன் வாழும் ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) விற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி வாய்ந்த ஹனுமனின் உதிரத்தில் ஏற்பட்ட கல் கிடைக்க, ஹனுமந்து வின் பலம் கூடு கிறது..இதை கண்ட மைக்கேல், பேராசைப்பட்டு, அந்த சக்தி வாய்ந்த கல்லை பெற குறுக்கு வழியில் அக்கிராம மக்களுக்கு பல கொடுமைகளை விளை விக்கிறார்…. அதிலிருந்து கிராம மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் ?? நீதிக்கும் அநீதிக்கும் நடுவில் நடக்கும் போரில், யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பதே ஹனுமன்….
புராண உருவகமான ஹனுமானை நினைவூட்டும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

ஹனுமனாக நடித்த தேஜா சஜ்ஜாவின் நடிப்பு சூப்பர்,அக்காவாக வரும் வரலட்சுமி பாசமிகு அக்காவாக, அளவாக நடிக்க, அம்ரிதா ஐயர் அழகாக வந்து போகிறார்..மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.cg யில் வரும் குரங்கு சேஷ்டை, படத்தின் இருதி காட்சியில் கை கொடுக்கிறது
VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை என் திரைக்கதை அமைத்தவிதம் அருமை. அஞ்சனாத்ரி யில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான ஹனுமன் உருவக சிலை அச்சு அசலாக அமைத்திருக்கும் விதம் நம்மை ஆச்சிரியப்பட வைத்திருக்கு…கடைசி 20 நிமிட காட்சி ஹனுமன் பக்தர்களை புல்லரிக்க வைக்கும் காட்சி…அனுதீப் தேவ், கௌரஹரி, கிருஷ்ண சௌரப் ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்…VFX காட்சி, எடிட்டிங், பின்னணி இசை என அனைத்தும் இப்படத்திற்கு கூடுதல் பலம்.ஹனுமன்- வான் உயர்ந்தவன்