
வயல் மூவீஸ் சார்பில் டாக்டர் வீரபாபு, மஹானா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் முடக்கறுத்தான். இவர்களுடன் சூப்பர் சுப்புராயன், மயில் சாமி, சாம்ஸ், காதல்சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோர் நடிசிருக்காங்க….
குழந்தை கடத்தல் கதையை, மூலிகையோடு குழைத்து கொடுத்திருக்கிறார் நாயகன் மற்றும் இயக்குநரான டாக்டர் வீரபாபு..
நாயகனாக டாக்டர் வீரபாபு, மூலிகை வியாபாரம் செய்யும் அவர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பராமரித்து காப்பாற்றி வருகிறார். அவருக்கும் நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாக, வரும் திருமணத்திற்காக அக்காவை அழைக்க, சென்னை செல்லும் டாக்டர் வீரபாபு விற்கு, அக்காவின் குழந்தை காணாமல் போனது தெரிய வருகிறது… அக் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்கும் அவர் அதன் பிண்ணனியில் குழந்தை கடத்தும் கும்பலின் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்று செயல்படுகிறது என்பதனை கண்டுபிடிக்கிறார். அக் கும்பலை லாவகமாக கண்டு பிடித்து , அதனை முறியடித்தது குழந்தைகளை மீட்பது தான் கதை…

7 நிமிடத்திற்கு ஒரு குழந்தை நம் நாட்டில் கடத்தப்பட்டு வருகிறது, என்று புள்ளி விவரத்தோடு சொல்கிறார்..அதனை படம் பிடித்து அரசாங்கத்திற்கு அனுப்பி உதவுகிறார்…ips அதிகாரியாக சமுத்திரகனி..
மயில்சாமி..ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவர் வரும் காட்சிகள் நமக்கு ஆறுதல்..
நாயகி மஹானா, அழகாக வந்து போகிறார். சாம்ஸ், காதல் சுகுமார், மற்றும் வெங்கல் ராவ் இருந்தும் காமெடிக்கு பஞ்சம்..
பழநி பாரதியின் வரிகளில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது