

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்க ..ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘ஜோ’. இப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார்.
கதா நாயகிகளாக பவ்யா, மற்றும் மாளவிகா மனோஜ், ஆகியோர் நடிக்க இவர்களுடன் அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வருண்.கே.ஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
Pro .d”one .
மனதை வருடும் காதல் கதைகளில் தற்போது வெளி யாகிருக்கும் “ஜோ ‘ ம் ஒன்று…
பள்ளி பருவ காலத்தில் ஆரம்பித்து துடுக்குடன் அடுத்த பள்ளியின் சுவரில் எகிறி குதித்து கல்ட்சுரலில் குதுகலமாய் ஜோ வகிய ரியோ ராஜ் கலந்து கொள்ள …அது அடி தடியில் முடிந்து வெளியேறுகிறார்கள்…
அடுத்து கல்லூரி யில் காலத்தில் கேரளத்து சுஜி யின் மேல் காதல் வயப்படுகிறார் ஜோ…. முத்தம் பரிமாற்றத்தி்ல் இருந்து குதுகலமாய் போன காதல்… சின்னச் சின்ன சண்டை களால்….ஒருவருக்கொருவர் மற்றவர்களை காயப் படுத்துவதில் சளை த்தவர்கள் அல்ல என்பதினை உணர்கிறார்கள்..
ஒரு கட்டத்தில் .இனி ஒருவரை ஒருவர பிரிந்து இருக்க முடியாது என்பதை உணர …சுஜி கேரளாவிற்கு வந்து அப்பாவிடம் பேசு என்று சொல்ல…ஜோ வும் சென்று கேட்கிறார்…ஜோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் சுஜியின் வீட்டார் அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள். அதன் விளைவு ஜோ வின் வாழ்க்கையினை புரட்டி போடுகிறது….


ஒரு வாழ்க்கை முடிந்தது என்று முற்றுப்புள்ளி வைக்கும் தருவாயில்….அது முற்றுப்புள்ளி அல்ல…அழகான இன்னொரு வாழ்க்கைக்கு தொடக்கம் என்றும்…எந்த ஒரு பிரச்சினை கும் தற்கொலை தீர்வல்ல….என்பதனை அழகாக படம் பிடித்து சொல்லிருக்காரு இயக்குனர்..
காதலும் மோதலும் .. மாய் வரும் ரியோ அழகாக தெரிய..பின் பாதியில் தாடியுடன் கலங்கும் இடத்தில் நம்மையும் கலங்க வைக்கிறார்…கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்…

கேரளத்து வரவாக வந்திருக்கும் சுஜி யான மாளவிகா மனோஜ் குழந்தை தனமாக வசீகரத்துடன் தெரிய… மற்றொரு நாயகியாக வரும் பவ்யா வோ மிடுக்கு டன் நடப்பதில் இருந்து பார்வை முதல் குடுத்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிராரு…
படத்தின் முதல் காட்சியில் வரும் ஒரு விஷயத்தை மறக்கடித்து…climax இல் twist வைத்திருப்பது….திரைக்கதை யின் நேர்த்தி…
மொத்தத்தில் ஜோ ஒரு நிறைவான தன்னம்பிக்கை மிக்க காதல் கதை….
