பாஷன் ஸ்டுடியோஸ் மற்றும் soldier’s factory இணைந்து தயாரித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி ஹரிஷ் கல்யாண், m.s. பாஸ்கர் , இளவரசு, இந்துஜா ஆகியோர் நடித்து வெளி வர இருக்கும் படம் பார்க்கிங்..

வாடகை வீடோ சொந்த வீடோ…வாழும் இடத்தில் அக்கம் பக்கத்தல உள்ளவர்கலாள் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் நிம்மதி போய்விடும் என்பதினை எடுத்து சொல்லுகிறது …பார்க்கிங்.

ஐ.. டி ஊழியர் ஈஸ்வர் ( ஹரிஷ் கல்யாண்) தன் மனைவி அதிகா (இந்துஜா )
வுடன் புது வீட்டுக்கு குடியேருகிறார்.மாடி வீட்டில் குடியேறும் அவர் வீட்டின் கீழ், அரசு வேலை அதிகாரியாக வரும் இளம்பரிதி (m.s.Bhaskar ) இருக்க, தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு இருவரும் அன் பாக பழகுகிறார்கள்…

கர்ப்ப மாக இருக்கும் தன் மனைவி இந்துஜா வை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல, harish ஒரு கார் வாங்குகிறார்….கீழ் வீட்டில் குடியிருக்கும் m.s.Bhaskar ன் பைக் நிற்கும் இடத்தில் புது கார் ஐ நிப்பாட்ட முதலில் ஒத்து ப் போகும் இருவரது மன நிலமை யும்…மாறி ,சிறு சிறு பிரச்சினைகள் எல்லாம் பெரிதாகி..சண்டை வர வீம்புக்கு தானும் ஒரு கார் வாங்கி ஏட்டிக்கு போட்டியாக நிறுத்துகிறார் M.s. Bhaskar.

குடியிருக்கும் ஒரே கார் பார்கிங் ல்..யார் முதலில் வந்து இடம் பிடிப்பது என்று போட்டி போட்டு இடம் பிடிக்க முயல , அவர்களுக்குள் சண்டை மேலும் வலுக்கிறது….

ரெண்டு டெனன்ட் களுக்கு இடையே ஏற்படும் சாதாரண பார்க்கிங் பிரச்சினை, அவர் களை எந்த அளவிற்கு கொண்டு செல்கிறது என்பதை ரசிக்கும் படி படமாக்கியிருக்கிறாரு இயக்குனர்…

எப்போதும் சாக்கலட் பாய் ஆக வந்து, காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், இந்த படத்தில் அடுத்த கட்டத்தை தாண்டியுள்ளார்….நடிப்பில் கொஞ்சம் முதிர்ச்சி பெற்றுள்ளார். ஆதிகா வாக வரும் இந்துஜா துணிச்சலோடு இந்த கதாபாத்திரத்தில் நடித்த தோடு கதா பாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாக நடிசிருக்காங்க… ஆத்திரம்,கோபம்,வஞ்சம் என அனைத்து உணர்வுகளையும், நொடிக்கு நொடி மாற்றி மாஸ் காமிச்சுருக்காரு எம்.எஸ்.பாஸ்கர்…

சாம் C..S . இசையில் jiju sunny ஒளிப்பதிவில் பார்கிங் ஒரு நல்ல படைப்பு…