தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் சூரகன்.

இதில் கார்த்திகேயன் , பாண்டியராஜன், நிழல்கள் ரவி,மன்சூர் அலிகான், வின்சென்ட் அசோகன்,சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுப்புலேட்டி மற்றும் வினோதினி ஆகியோர் நடிச்சுருக்காங்க…

இயக்கம் – சதிஷ் கீதா குமார்

போலீஸ் அதிகாரி யாக வரும் ஈகன் ( கார்த்திகேயன் )க்கு ஒரு விபத்தில் பார்வை குறைபாடு ஏற்பட..அதாவது தலைகீழாக எல்லாம் தெரிய …குற்றவாளிக்கு பதிலாக தவறுதலாக வேறொரு பெண்ணை சுட, மேலதிகாரிகளால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

தனது அக்கா வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு பெண் காரில் இருந்து கீழே தள்ளப்பட ,ஓடி சென்று அந்த பெண்ணை காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்..மறுநாள் அந்த பெண் இறந்து விட, அந்த பெண் யார் என்று துப்பறிய தொடங்குகிறார்…

அந்த பெண் கோடீஸ்வரர் வரதராஜன் ( நிழல்கள் ரவி) னின் பேத்தி என்று தெரிய வருகிறது…அந்த பெண்ணோடு சேர்ந்து மேலும் இரண்டு பெண்கள் காணாமல் போக , வரதராஜனின் உதவியோடு மற்ற பெண்களை யும் தேட முயலுகிறார்…அந்த இரண்டு பெண்கள் யார்? அந்த கொலையின் பின்னனி யில் யர்பயார் உள்ளர்கள் ?அவர்களை கண்டு பிடித்து மீண்டும் பணியில் சேர்ந்தாரா? என்பது தான் கதை…

துடிப்பான போலீஸ் அதிகாரியாக வரும் கதாநாயகன் கார்த்திகேயன் சிரத்தை எடுத்து சண்டை காட்சிகளில் நடிச்சிருக்காரு கூடிய விரைவில் பெரிய ஆக்சன் ஹீரோ வாக வர வாய்ப்பிருக்கு….ஆங்காங்கே வரும் சுபிக்ஷா வின் காட்சிகள் குறைவாக தெரிந்தாலும் , அடுத்து வரும் சண்டை காட்சிகளால் அது மறந்து விடுகிறது.பார்வை குறைபாட்டை மேலோட்டமாக வைத்து ..அரசியல் தூக்கலாக பர பரப்பான ஆக்சன் காட்சிகளோடு இயக்கியிருக்காரு இயக்குனர்.

அச்சு ராஜாமணி இசையில் சதிஷ் கீதா குமார் ,ஜேசன் வில்லியம்ஸ் ஓளிப்பதிவில் துணிச்சலாக வந்திருக்கான் சூரகன்…