சக்தி பிலிம் பேக்டரி வெளியிட , அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் ஷான் ரஹ்மான் இசையில் வெளியாக இருக்கும் படம் கண்ணகி.

இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் ,
அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, மௌனிகா யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நான்கு பெண்களின் வாழ்வியலை மையமாக வைத்து , அந்த கதா பாத்திரங்களின் முதல் எழுத்துக்களை கோர்வையா க்கி அவர்களின் வலிகளை தனித்தனியாக சொல்லியிருக்கும் படம் கண்ணகி.

திருமணத்திற்கு நீண்ட நாட்களாக காத்திருக்கும் அம்மு அபிராமி, திருமண வாழ்க்கையை தக்க வைத்து கொள்ள போராடும் வித்யா பிரதீப், திருமணத்தை அறவே வெறுக்கும் ஷாலின் ஜோயா, திருமணம் ஆகாமல் கருவை வயிற்றில் சுமந்து அதை அழிக்க முயலும் பெண்ணாக கீர்த்தி பாண்டியன், இப்படி 4 பெண்களின் பிரச்சினைகளை கையாண்டு சாமர்த்திய மான திரைக்கதை மூலம் அதற்கு சரியான தீர்வும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்..

ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை பார்க்கும் போது ஒர் செடி நடும் அம்மு அபிராமி…பல செடிகள் ஆகியும் திருமணம் நடக்காத பட்சத்தில், அப்பா நான் வந்து நிக்கிறேன்…மொத்தமா 4 அல்லது 5 மாப்பிள்ளையை வர சொல்லுங்கள் என்று சொல்லும் இடத்தில்..திருமணம் ஆகாமல் தவிக்கும் பெண்களின் வலிகளை அப்படியே பிரதி பலிச்சுருக்காங்க.

பல போரட்டத்திற்கு பின் விவாகரத்து முடிவுக்கு வர, இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகும் வித்யா பிரதிப், அது கிடைக்காமல் ஏமாறும் இடத்தில் விரக்தியோடு இயலாமையும் சேர, அழும் இடத்தில் உணர்ச்சிகரமாக குடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிசிருக்காங்க…சிகிரெட்,தண்ணி,என தன் இஷ்டத்திற்கு வாழும் மேல் தட்டு மக்களின் லிவிங்டுகெதர் வாழ்க்கையை வாழ, அதிலும் தோற்று போய் விரக்தியின் உச்சத்திற்கே போன ஷாலின் ஜோயா மிரட்டலாக தெரிகிறார்.,
கீர்த்தி பாண்டியனுக்கு வசனங்கள் இல்லாத போதும் முக பாவனையால் மட்டுமே அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி, இறுதி காட்சியில் நாம் எதிர்பார்க்காத டுவிஸ்ட் டோடு மொத்த திறமையை இந்த படத்தில் காட்டியுள்ளார். மௌனிகா வும், மயில்சாமி யும் சிறந்த தேர்வு. யதார்த்தமான நடிப்பில் மௌனிகா தெரிய, இது வரை பார்த்திராத கதாபாத்திரத்தில் மயில்சாமி தனியாக அசத்தியிருக்கிறார்

ஆக பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அநீதிகளை முடிந்த அளவிற்கு பேசி, நடித்தும் இருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்…அவரின் திரைக்கதை வடிவத்தை புரிந்து சிறப்பாக எடிட் செய்திருக்காரு எடிட்டர் சரத். ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கண்ணகிக்கு பலம்.