
அறிமுக இயக்குனர் CS கார்த்திகேயன் இயக்கி, அசோக் செல்வன் நாயகனா க நடித்து வெளிவந்திருக்கும் படம் – சபா நாயகன். இவருக்கு ஜோடியாக கார்த்திகா முரளிதரன்,சாந்தினி சவுத்ரி, மேகா ஆகாஷ் மற்றும் மயில்சாமி, மைக்கெல் ஆகியோர் நடிசிருக்காங்க.
இசை ஜீயோன் ஜேம்ஸ்.
குடித்து விட்டு இன்ஸ்பெக்டர் விஷ்ணு (மைக்கெல்) விடம் மாட்டிக் கொள்ளும் அரவிந்த் (அசோக் செல்வன்), கான்ஸ்டபிள் மயில்சாமி- யிடம் தன்னுடைய காதல் கதையை சொல்ல ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து கதை நம்மை ஈர்க்கிறது..
பிளஸ் ஒன்(+1) படிக்கும் சபாவின் நண்பர்களுக்கெ ல்லாம் காதல் கைகூட தனியாளாக நிற்கும் சபா, பள்ளி, கல்லூரி என தான் படிக்கும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு, அவர்களை காதலிக்க முயல, ஒவ்வொரு காதலும் break up ல் போய் முடிகிறது..காதலிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் காதலிக்க வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியாக முதுகலை படிக்கும் இடத்தில் காதலிக் கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினாரா ? அந்த காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே மீதி கதை…
காதல் புனிதமானது அது ஒரு முறை தான் வரும் என்று, காதில் பூ சுற்றிய காலம் போய் – இப்போதைய காதல் ஜஸ்ட் லைக் தட் என்று…எத்தனை முறை வேண்டுமானாலும் வரும். எத்தனை முறை வந்தாலும் காதல், காதல் தான் ன்னு – நகைச்சுவை கலந்து சொல்லியிருக்காரு இயக்குநர்.
பள்ளி மாணவனாக வரும் அசோக்செல்வன் வசீகரமாக தெரிவதுடன் துள்ளலான நடிப்பை கொடுத்திருக்க, அவரது நண்பனாக வரும் நக்கலைட் ஸ் அருண் முக பாவத்தில் காமெடி யை கலந்து, நடிப்பாலும் நம்மை சிரிக்க வைச்சிருக்காரு . கார்த்திகா முரளிதரன் இளமை மற்றும் பலம். ஜீயோன் ஜேம்ஸின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் படியாகவும், துள்ளலான நடன அசைவுகளும் கொண்டுள்ளது… இளசு களை கவரும் காதல் இளவரசன் – சபா நாயகன்.
