
மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை ஆகியோரின் நடிப்பில் வெளயாகி யிருக்கும் படம் மதிமாறன்.
கிராமத்தில் தபால்காரராக வேலை பார்க்கும் எம் எஸ் பாஸ்கர் க்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன.. இரு குழந்தைகளும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர, மகள் மட்டும் வயதுக்கு ஏற்ப உயரத்துடன் இருக்க, மகன் வெங்கட் செங்குட்டுவனோ (நெடுமாறன்) உயர குறைபாடு கொண்டு வளராமல் போக..பலரது
கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறான். தந்தையான எம்.எஸ். பாஸ்கர்- ம் அவரது அக்கா மதியும் அவரின் குறை தெரியாத அளவுக்கு அவருக்கு பக்க பலமாக இருக்கின்றனர்..
கல்லூரி யில் படிக்கும் நெடுமாறனி ன் தோழியான ஆராத்யா, அவரின் உயர குறைபாட்டினை பெரிதாக எடுக்காமல் சகஜமாக பழகி படிப்பிலும், காலேஜ் கல்ட்சுரஸ் லிம் அவரின் திறமை களை நிரூபிக்க உதவுகிறார்…இவர்களுக்குள் எழுந்த காதலை சொல்ல முற்படுகையில், இவானா (மதி)தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தி வர, எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக்கொள்ள, அதனை நேரில் பார்க்கும் நெடுமாறன் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தும், .. உயர குறைபாட்டால் முடியாமல் போகவே , அவர்கள் இறக்க நேரிடுகிறது..இயலாமையும் , பெருங்கோபமும் சேர்ந்து, தன் சகோதரி மதி யை தேடி சென்னைக்கு வருகிறான்… அதே சமயம், சென்னையில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் கற்பழித்து கொல்லப்பட,
அக் கொலைக்கு யார் காரணம் .?? நெடுமாறன் தன் சகோதிரி யைக் கண்டு பிடித்தானா ? இந்த இரண்டிற்குமான தொடர்பு என்ன ? என்பதே மீதிக்கதை.

நெடுமாறனாக வரும் வெங்கட் செங்குட்டுவன், ஒவ்வொரு காட்சியிலும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி யிருக்காரு…பள்ளி கல்லூரி என வரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தொய்வு இல்லாத நடிப்பை கொடுத்து, நம்மையும் அக்காட்சி யின் ஒன்ற வைத்து விட்டார்..குறிப்பாக கல்லூரி யில் அவர் ஆடும் நடன வளைவுகள் அருமை.
மதி யாக வரும் இவானா, கல்லூரி மாணவி யாக துள்ளல் ஆகவும் பின் பாதியில் பக்குவமாக வும், நடித்து வித்தியாசத்தை காண்பிச்சிருக்காரு..
கதாநாயகி யாக வரும் ஆராத்யா போலீஸாக வரும் இடத்தில் மிடுக்காக தெரிய…எந்த வேடம் கொடுத்தாலும் பிச்சு எரியும் எம்.எஸ்.பாஸ்கர் இப்படத்திலும் தவறவில்லை.
இறுதி காட்சியில் போஸ்ட் மாஸ்டரிடம் நெடுமாறன் பேசும் வசனம் – இயக்குநரின் டச்.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வலு சேர்க்க, பர்வேஸ்-ன்
ஒளிப்பதிவில் மதிமாறன் உயரம் தொட்டவன்….