
பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கௌடா, போஸ் வெங்கட்,நிழல்கள் ரவி, கஜ ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் நந்தி வர்மன்.
மன்னன் நந்திவர்மன், அவனை வீழ்த்தும் ஒற்றை கண் பலசாலி, கண்ணுக்குத் தெரியாத ஆயுதம் , புதையுண்ட கோவில் என விரியும் , இடத்திலிருந்து சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது கதை…
1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், செஞ்சி யில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வர. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் ஆகியோர் தலைமையில் மாணவர் குழு ஒன்று ஆய்வு மேற்கொள்ள அங்கு செல்கிறது.. இதனை அறவே விரும்பாத அங்கு வாழும் கிராம மக்கள், ஆய்வு நடத்த தடை செய்கிறார்கள்…பின் போலீஸ் அதிகாரி சுரேஷ் ரவி கிராம மக்களின் அச்ச த்தினை போக்கி ஒரு வழியாக ஆய்வு நடத்த அனுமதி வாங்கி தருகிறார். இதற்கிடையே அக் கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்த்து வர, ஒரு நாள் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இந்த கொலைகள் பற்றிய விசாரணையை
கையில் எடுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய, அந்த மர்மத்தின் பின்னணி என்ன?, உண்மையிலேயே அந்த ஊரில் நந்திவர்மன் கட்டிய கோவிலும், புதையலும் புதைந்திருக்கிறதா? என்பதை கண்டு பிடிப்பதே மீதி கதை..
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் ஒவ்வொரு ரகம் கொண்டதாக தேர்வு செய்கிறார். அந்த வகையில், கதைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக மிடுக்குடன் துடிப்பாக நடிசிருக்காரு…காதல் காட்சிகள் குறைவு என்றாலும் குடுத்த கதாபாத்திரத்தில் நிறைவாக நடிசிருக்காரு….

நாயகியாக நடித்திருக்கும் ஆஷா கௌடா, தன் முகபாவங்கள் மூலமாகவே நடிப்பு திறமையை வெளிப்படுத்தி யிருக்கார்.. மேலும் போஸ் வெங்கட் நிழல்கள் ரவி மற்றும் கஜராஜ்,jsk கோபி ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்ய,
ஜெரால்ட் ஃபெர்லிக்ஸ் இசையில் பாடல்கள் மாற்றும் பின்னணி இசை துணை நிற்க, ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து எளிமையான லொக்கேஷன் களை கூட பயங்கரமாக காட்சிப்படுத்தி பழங்காலத்து கோவில்களையும், மலைப்பகுதி களையும் நம் கண்முன்னே காட்சிப்படுத்திய விதம் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றினை கூறும் பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டு, இன்னமும் பூமிக்கு அடியில் புதையுண்டிருக்கு, என்ற உண்மையை சொல்லி அதை வசனங்களாக மட்டுமின்றி அதனை காட்சி படுத்தியிருக்கும் விதத்திற்காகவே இயக்குநர் பெருமாள் வரதன் ஐ பாராட்டலாம்..
நந்திவர்மன் – கற்கால புதையல்