
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் என பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் லவ்வர்….
இயக்கம் – பிரபுராம் வியாஸ்
இசை – ஷான் ரோல்டன்
எப்போதும் குடி, தம் என திரியும் மது பிரியரான
அருண் (மணிகண்டன்) சொந்தமாக ஒரு கஃபே வைக்க போவதாக சொல்லிக்கொண்டு திரியும் அவரும், ஐடியில் பணிபுரியும் திவ்யாவும் (ஸ்ரீகவுரி ப்ரியா) கல்லூரியிலிருந்து காதலிக்கின்றனர். 6 வருட காதல் கொஞ்சம் கொஞ்சமாக கசக்கத் தொடங்குகிறது….அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்று, ஆணாதிக்கம் மேலோங்கி தன் காதலி மற்ற எந்த ஆணிடமும் நெருங்கி பழகக் கூடாது என்பதில் ஆரம்பித்து, அதனின் அடுத்த கட்டமாக சந்தேக படுவது, கெட்டவார்த்தையில் திட்டுவது, ‘எங்க அம்மாவ பற்றி யோசிச்சு பாத்தீயா?’ என எமோஷனல் ப்ளாக் மெயில் செய்வது, இப்படி பல சைக்கோ தனமான வேலைகளை செய்துவிட்டு கடைசியில், ஒற்றைவரியில் ‘சாரி என்ன ஏத்துக்கோ ஒரு சான்ஸ் கொடு’ என கெஞ்சி அழும் சைக்கோ காதலனின் பிடியில் மாட்டி தவிக்கும் காதலியாக ஶ்ரீகவுரி பிரியா (திவ்யா) ஒரு கட்டத்தில் கட்டளை போடும் அருணின் ‘பாதுகாப்பு’ உத்தரவுகளை மீறி தனக்கு பிடித்தமானதை செய்ய, அதன் விளைவாக அவர்களின் உறவில் விரிசல் விழுகிறது. இந்த விரிசல் போக போக மேலும் விரிவடைய, இறுதியில் இவர்களின் காதல் வாழ்ந்ததா ?, இல்லை வீழ்ந்ததா ? என்பதே ‘லவ்வர்’ (Lover) படத்தின் திரைக்கதை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ‘அருண்’ என்ற கதா பாத்திரமாகவே வாழ்ந்து, தான் செய்யும் தவறு என்ன? என்று கூட புரிந்து கொள்ளாத வராகவும், காதலிகளை வறுத்தெடுக்கும் பல இளைஞர்களின் காதல் கொடுமைகளை, தன் நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்துள்ளார் மணிகண்டன்…
ஒவ்வொரு முறையும் காதலனால் துயரப்படும் போது, இவரின் அழுகை நம்மையும் கலங்கடிக்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக நடிச்சிருக்காரு நாயகி ஶ்ரீகவுரி பிரியா..
கொடுத்த கதாபாத்திரத்தில் அளவாக கச்சிதமாக நடிச்சுருக்காரு கண்ணா ரவி.

பல ஆண்டுகளாக, ‘காதல்’ , பொசஸ்சிவ் என்ற பெயரில் ஆண்கள் கையாளும் அடிமை பிம்பத்தை உடைத்து, விசிரி எரியும் வகையில் உள்ளது லவ்வர் படம். நாயகன் மணிகண்டன் ஒரு காட்சியில் “உங்கள் காதலிக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறீர்கள்?” என்று கேட்க..அதற்கு ஒருவர், “அவளுக்கு சுதந்திரம் கொடுக்க நான் யார்? அவளது சுதந்திரம் அவளுடையது, என்னுடைய சுதந்திரம் என்னுடையது” என்று கூறும் காட்சி ஒன்றே போதும், இயக்குனரை பாராட்ட..மேலும் முழு படத்தையும் “ஒரு ஒற்றை டயலாக் கில்” விளங்க சொல்லி அருமையான க்ளைமேக்ஸ் மூலம் படத்தை தூக்கி நிறுத்தி விட்டார் இயக்குனர் பிரபுராம் வியாஸ்.
முதல் பாதியில் வேகம் தெரிய, இரண்டாம் பாதியின் நீளம் நம்மை கொஞ்சம் நெளிய வைக்கிறது..
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா மூலம் படம், பார்க்க பிரமிப்பாக உள்ளது. ஷான் ரோல்டனின் இசை இப் படத்திற்கு பெரிய பலம்.
லவ்வர்..அளவுக்கு அதிகமானால் காதலும் நஞ்சு..லவ் டார்ச்சர்..3.5/5