
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் லால் சலாம்..
இசை – ஏ. ஆர்.ரகுமான்
மூரார்பாத் கிராமம், இருவேறு மதத்தினர் (இஸ்லாமியர் – இந்துக்கள் ) அடங்கிய இரண்டு கிரிக்கெட் அணிகள், அரசியல் ஆதாயத்துக்காக இவர்களுக்குள் சண்டை மூட்டி ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கின்றனர் அரசியல்வாதிகள்…..அதற்கேற்றவாறு இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் மேட்ச்சில் மோதல் வெடிக்க, அது பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. இந்த கலவரம் , இரண்டு கிராமங்களையும் அதிலிருக்கும் மனிதர் களின் போக்கையும் மாற்ற அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதைப் பேசுகிறது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் ‘லால் சலாம்’.
முதல் பாதியில் இந்துக்கள் இஸ்லாமியர் மோதல், விஷ்ணு விஷாலின் காதல், இரண்டு கிரிக்கெட் டீம்கள், ரஜினிகாந்த், அவர் மகன் விக்ராந்த், அவரின் கிரிக்கெட் கனவு, திருவிழா தேர், … என எக்கச்சக்கமான கிளைக் கதைகளை உள்ளடக்கி அத்தனைக்கும் ரஜினி மூலம் தீர்வு சொல்லி யிருக்குறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினகாந்த்..
இரண்டாம் பாதியைக் காப்பாற்றுவதில் முக்கிய தூணாக இருப்பது ரஜினி மட்டுமே…உணர்வுபூர்வமான காட்சிகளில் தன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி, கதைக்கருவிற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார். கேமியோ ரோலில் ரஜினி யா? விக்ராந்த் தா??

காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு எனத் தேவையான நடிப்பை தன் பாத்திரமறிந்து வழங்கியிருக்கிறார் நாயகன் விஷ்ணு விஷால். மற்றொரு நாயகனான விக்ராந்திற்கு இன்னும் அழுத்தமான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். இருந்தும், அவர் நடிப்பில் குறையேதுமில்லை. விஷ்ணு, விக்ராந்த் இருவருமே கிரிக்கெட் ஆடும் காட்சிகள் நேர்த்தி..
விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு தேவையான பங்களிப்பைச் செய்ய, இசை
ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருந்த போதும் படம் மெல்ல நகர நகர, ஒரு கட்டதில் மறந்து போய் இசை யாரென்று கேட்க தோன, அடுத்து வரும்
தேர் திருவிழா’ பாடல், ஆட்டம்போட வைக்கிறது. பின்னணி இசையால் முடிந்த அளவிற்குப் படத்திற்குக் கை கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
பிரிவினைவாத அரசியலுக்கு எதிரான சகோதரத்துவத்தைப்’ பற்றியும், ஜாதி மத பேதமின்றி ஊர் கூடி தேர் இழுத்தால் ஒற்றுமை ஓங்கும் என மத நல்லிணக்கத்தை சொல்லியிருக்கிறது லால் சலாம்…அதைத் தெளிவான திரைக்கதையால், இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்…
லால் சலாம் – மத நல்லிணக்கம்