
எஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் திரை கதை எழுதி இயக்கியிருக்கும் படம் இ மெயில்…
இப்படத்தில் ராகினி திவேதி, அசோக் குமார், ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, பெல்லி முரளி , அக்ஷய் ராஜ், வனிதா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, ரத்னா, ஷைலு, ஸ்வேதா, தேஜஸ்வினி, தியா, அஜித் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிறு வயதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுள்ள அபி (ராகினி திவேதி) யின் அம்மா இறக்க நேரிட, சொத்துக்கள் எல்லாம் வேலைக்காரி வசம் செல்கிறது, வேலைக்காரியால் கொடுமைப்படுத்தப்படும் அவர்… அங்கிருந்து அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறார், . வளர்ந்த பின் தோழிகளுடன் வடைகை வீட்டில் தங்கும் அவளுக்கு , தன் செய்யும் வேலையிலும் வருமானம் வராமல் போகவே, தவிக்கும் அவள் ஆன்லைன் கேம் விளையாட ஆரம்பிக்கிறார். அதில் வரும் மூன்று நபர்களில் யார் இறப்பர்கள் ? என்று சரியாக கணித்தால் பணம் கிடைக்கும் என அவளின் ஆசையை தூண்டி விட விளையாட்டை தொடருகிறார்… இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விமல் (அசோக் குமாரை) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் ஆன் லைன் கேம்.. விளையாட தொடங்குகிறது….இந்த ஆபத்தான விளையாட்டு ல் இருந்து தன்னையும் தன் தோழி களை யும் நேரடியாக களத்தில் இறங்கி முறியடிப்பதே இ மெயில் படத்தின் கதை..
கதையின் நாயகியாக நடிக்கும் ராகினி திவேதி படம் முழுவதும் இளமை துள்ளும் அழகுடன் தாராளமாக காதல் காட்சியிலும், அதிரடியாக ஆக்ஷன் காட்சியிலும் தூள் கிளப்பியுள்ளார்… அசோக் கதாநாயகனாக இருந்தும் காட்சிகள் குறைவு..
ஆன்லைன் ஆட்டத்தின் ஆபத்தினை உணர்த்தும் கதையின தேர்ந்தெடுத்து, நேர்த்தியான திரைக்கதை மூலம் உணர்த்தியிருக்காரு..
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை – அவினாஷ் கவாஸ்கர்,
பின்னணி இசை – ஜூபின்,
ஒளிப்பதிவு – செல்வம் மாதப்பன்,
ஸ்டண்ட் – மாஸ் மதா,
மக்கள் தொடர்பு : ஏ.ஜான்.
