
V துரை ராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி இயக்கி சயத் மஜீத், மேஹ்னா எலென், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பைரி….
புறா பந்தயத்தை மையப்படுத்தி இக் கதை களத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர்..
நாகர்கோவிலில் வசிக்கும் இளைஞன் லிங்கம்
தன் நண்பன் ஜான் கிளாடி புறா வளர்ப்பதை பார்த்து சிறு வயது முதலே .. புறா வளர்க்கும் ஆசையில் உந்தப்பட்டு,
கல்லுரி படிப்பை முழுவதும் முடிக்காமல், வேலைக்கும் போகாமல் புறா பந்தயம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறான்… ஊரில் உள்ள பெரிய ரவுடி சுயம்புவும் புறா பந்தயம் நடத்துகிறார். பந்தயத்தில் சுயம்பு செய்யும் ஊழலை லிங்கம் கண்டுபிடித்து பிரச்சனை செய்ய, ஊர் பண்ணையார் சமாதானம் செய்ய, அதையும் மீறி இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் லிங்கம் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் கிடக்க, ஜான் கிளாடியோ சுயம்பு வை தாக்கி விடுகிறார்.. இதனால் ஆத்திரம் அடைந்த சுயம்பு .ஜானுக்கு ஸ்கெட்ச் போட, பயத்தில் ஒளிந்து கிடக்கும் ஜானை பண்ணையார், சுயம்பு விடம் சமாதானம் பேசி வெளியில் கொண்டு வர, இடையில் புறா பந்தயமே வேண்டாம் என்று ஹீரோ லிங்கம் சென்னைக்கு சென்று விடுகிறார்…சுயம்பு வால் தாக்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாக உயிருக்கு போராடுகிறார் லிங்கத்தின் நண்பன் ஜான் கிளாடி… செண்ணை சென்ற லிங்கம் , வுயிருக்கு போராடும் நண்பனை பார்க்க வருவான் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவன் வரமாட்டான் என்று கதை சொல்லி பாகம் ஒன்றை முடிக்கிறார் இயக்குனர்…. ஏன் ?? என்பதை இரண்டாம் பாகமாக வைத்திருக்கிறார்கள்….
ஹீரோ சையத் மஜீத், ஆக்ரோஷமாக நடித்திருந்தாலும், காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். நண்பனாக நடித்திருக்கும் இப்படத்தின் டைரக்டர் ஜான் கிளாடி நடிகராகவும் ஜெயித்துவிட்டார். நாகர் கோவில் ன், வட்டார வழக்கில் பேச்சும் உடல் மொழியும் அருமை..
ஹீரோ வின் அம்மா வாக நடித்திருக்கும் விஜிசேகர்..தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசத்தை அச்சு அசலாக யதார்த்த தாயாக நடித்து அசத்தி யிருக்காரு….
இப்படத்தில் நடித்த பெரும்பாலானவர்கள்..நடிகர்கள் அல்லாது நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்களாக வே இருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
ஒவ்வொரு தரமும் ஹீரோவின் புறா மேலெழும்பி சுத்தும் போது, நமக்கு ஹீரோ வின் புறா ஜெயிக்கவேண்டுமே என்ற பத பதைப்பை, பார்வையாளர்களுக்கு கொண்டு வந்து விடுவதே இயக்குநருக்கு கிடைத்த வெற்றி…மொத்தத்தில் பைரி வாழ்வியல் உணர்வு..