
ரீல்பெட்டி நிறுவனம், த்ரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து,
அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அதோமுகம்’.
இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. நாயகியாக சைத்தன்யா பிரதாப் நடிக்க இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் முக்கிய தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.
டீ எஸ்டேட் ஒன்றில் வேலை பார்க்கும் நாயகன் மார்ட்டின் தன் மனைவி லீனா விற்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் பரிசொன்றை குடுக்க, அவர் அதை ஏற்கனவே கண்டு பிடித்து, பதிலாக இவருக்கு ஒரு பரிசை வழங்குகிறார்..இதனால் எப்படியாவது இவரை சர்ப்ரைஸ் பண்ண புதிய முறையை தேடுகிறார்…அப்படி தேடும் இவர், தன் மனைவி போனில் ஹிட்டன் அப்(hidden app) ஒன்றை பயன்படுத்தி, அதன் மூலம் தன் மனைவியின் அழகான முக பாவத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து அவரை சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்று அந்த app ஐ இன்ஸ்டால் செய்கிறார்.. அதன் மூலம் அவர் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேர்கிறது! என்பதே படத்தின் மீதி கதை…

கதையின் நாயகனாக வரும் எஸ். பி. சித்தார்த் மார்டினாக நடிக்க, திரையில் அதிர்ந்து கூட பேச தெரியாத அமைதியான முக பாவனை கொண்டு அமை தியான நடிப்பில் நடிசிருக்ககாரு…தன் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்தும் கூட, அதிர்ச்சியில்லாத ஆர்பாட்டம் இல்லாத ,மிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..
நாயகியாக நடித்திருக்கும் சைதன்யா கொடுத்த கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடிசிருக்காங்க… கடைசி காட்சியில் தோன்றினாலும் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் பா அருண்பாண்டியன்…
மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசையமைக்க, சரண் ராகவனின் பின்னணி இசை இப்படத்தின் வெற்றிக்கு பெறும் பங்கு வகிக்கிறது…அருண் விஜயகுமார் ஒளிப்பதிவில் பச்சை பசேல் புல் வெளியும், ஊட்டியின் ஹேர்பின் வளைவுகளும் அருமை…
மொத்ததில் அதோ முகம், , தெளிவான திரைக்கதை யோடு, எக்கச்சக்க டுவிஸ்ட் & டர்ன்ஸ் களை கொண்டு வந்திருக்கும் நேர்த்தியான படைப்பு …3.5/5.