
லைப் சைக்கில் கிரியேஷன்ஸ் சார்பில்
அஜிஸ்.பி, மற்றும் பவன் கே தயாரிக்க,
அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில்
பவன், மேக்னா, சார்லி, பிர்லா போஸ் , அழகு, சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர்கள் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”
1995 இல் கதை நடப்பதாக காட்டப்பட, திருச்சி அருகே அரிமாபட்டி கிராமத்தில் காதலை அறவே வெறுக்கும் கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு நடுவே,
அதையும் மீறி கதையின் நாயகன் சக்திவேல் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த நாயகி (மேகனா) வை காதலித்து , இங்கு வாழ விடமாட்டார்கள் என்று தெரிந்து வெளியூருக்கு கூட்டி சென்று மணமுடிக்கிறார்.. இவ்வி ஷயமறிந்த கிராமத்து மக்கள், அவனுக்கு உதவி செய்த குடும்பத்தை அபராதம் விதித்தும், மண்ணித்தும் அனுப்பி விட.. சக்திவேல்-ன் தந்தை சார்லி யிடம் உன் மகனை ஒதுக்கி வைத்தால், ஊரில் இருக்கலாம் என்று நிபந்தனை வைக்க, அவரும் எனக்கு ஊர் தான் முக்கியம் என்று கூறி சென்று விடுகிறார்…அதை அறிந்த நாயகன் ஊருக்கு வர, அக் கிராமத்து மக்கள் நாயகனை ஏற்று கொண்டார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை….

நாயகன் பவன் தனது கதாபாத்திரத்தை புரிந்து, தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பை கொடுத்துள்ளார்.
நாயகி மேக்னா குடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடிசிருக்காரு…உடல் பருமனை குறைத்தால் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கு..
வழக்கம் போல தன் அனுபவம் மிகுந்த நடிப்பை கொடுத்திருக்காரு நடிகர் சார்லி
மணி அமுதவன் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்…
காதல் திருமணத்தால், இன்னும் சொந்த வீட்டிற்கும் சொந்த மண்ணிற்கும் செல்ல முடியாத, உண்மையான தம்பதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி வலுவாக இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லியிருந்தால்.. அரிமாபட்டி சக்திவேல் எல்லார் மனதிலும் நின்றிருப்பார்…2.5/5