நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா சார்பில் பா.ரஞ்சித், இணைந்து தயாரித்திருக்கும் படம் J .பேபி

இயக்கம்- சுரேஷ் மாரி

இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், மாறன் , சேகர் நாராயணன், மெலடி டார்கஸ்,தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கியிருக்காரு இயக்குனர் சுரேஷ் மாரி..

கதையின் ஆரம்பத்தில் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) அண்ணண் தம்பிகளான இருவருக்கும் காவல் நிலையத்திலிருந்து போன் வர, இருவரும் காவல்நிலையம் செல்கின்றனர். அங்கு இருக்கும் காவல் அதிகாரி யோ, எங்கப்பா உங்க அம்மா ? என்று கேட்க ..அண்ணண் தம்பி இருவரும் மாறி மாறி பதில் சொல்ல…கோபமடைந்த போலீஸ் அதிகாரி இவர்களின் அம்மா J.பேபி, சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்றிருப்பதாகவும்…அங்கிருந்து தகவல் வந்த படி சொல்ல… திகைத்த இவர்களை காவல் அதிகாரி கண்டித்து,கொல்கத்தாவிற்கு சென்று அம்மாவை கண்டுபிடித்து அழைத்துவர சொல்கிறார். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சினையால் 3 வருடம் பேசாமல் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து J. பேபி யான இவர்கள் கொல்கத்தா சென்று கண்டு பிடித்தார்களா? இல்லையா? இவர்களின் அம்மா கொல்கத்தா செல்ல காரணம் என்ன? என்பதே j. பேபி..

இது ஊர்வசி க்கான கதை…சில இடங்களில் இவரது நடிப்பால் நம்மை நெஞ்சம் கலங்கடிக்கிரார்..சங்கரு..சங்கரு என்று கூப்பிடும் ஒவ்வொரு இடத்திலும், தாய் பாசத்தை அப்படியே காட்டுகிறார்…ஊர்வசி நைட் ரவுண்ட்ஸ் வரும் இடம் அருமை..

இதுவரை காமெடி நடிகராக வலம் வந்த மாறன், இப்படத்தில் நல்ல குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தியுள்ளார்..

அண்ணனின் அண்புக்காகவும், குடும்ப உறவுக்காகவும் ஏங்கும் கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ்…அலட்டல் இல்லாத மிதமான நடிப்பு…மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடிசிருக்காங்க..
கொல்கத்தாவில் சகோதரர்களுக்கு உதவும் மிலிட்டரி மேன் ஆக வரும் நபர் நிஜத்திலும் உதவியவர், என்பது சிறப்பு…

டோனி பிரிட்டோ வின் இசையில் பாடல்கள் கண்ணீரை வரவழைக்கிறது..

ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவில்..கொல்கத்தா அருமை..

வயதானவர்கள் குழந்தைக்கு சமம் என்று எடுத்து சொன்ன தற்காகவே இயக்குனர் சுரேஷ் மாரி யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்…ஆக j.பேபி..ஸ்வீட் பேபி..4/5.