
ராமசந்திரன் பெருமாள் தயாரிப்பில் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்க த்தில் மகேந்திரன், தாசரதி நரசிம்மன், ஜி.எம்.சுந்தர் நடித்து வெளிவந்திருக்கும் படம் அமிகோ கரேஜ்..
நாயகன் மகேந்திரன்-ஐ சிலர் ஆயுதங்களுடன் துரத்தி வர, அவர்களிடம் இருந்து தப்பித்து காருக்குள் ஒளியும் அவர் ஒருவருக்கு ஃபோன் செய்ய கதை துவங்குகிறது…
பள்ளி பருவத்தில் இருக்கும் முதலே.. நாயகன்மகேந்திரன் தன் சக நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரனை அடித்து விடுவதால், பக்கத்தில் கேரேஜ் வைத்துக் கொண்டு போதை பொருள் விற்று வரும் ஜி.எம்.சுந்தரிடம் சொல்லுகிறார். ஜி.எம்.சுந்தர் அந்த ஆசிரியரை தூக்கி கொண்டு வந்து அடிக்க, அதிலிருந்து ஜி.எம்.சுந்தருடன் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அடிக்கடி அவரது கேரேஜ்க்கு சென்று வருகிறார். அதே சமயம் தனது வீட்டிற்கும் இவ்விஷயம் தெரியாத மாதிரி பார்த்துக்கொள் கிறார் .. வளர்ந்து கல்லூரி முடித்து, தன் நண்பர்களுடன் குடித்து விட்டு வெளிய வர மகேந்திரனின் பைக் ஐ அதே ஊரில் பெரிய தாதாவுக்கு அடியாளாக இருக்கும் தாசரதி நரசிம்மன், மது போதையில் எட்டி உதைக்க, தட்டி கேட்ட மகேந்திரனை தாசரதி தகாத வார்த்தையில் பேச மகேந்திரன், தாசரதி நரசிம்மனை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும்
தாசரதி நரசிம்மன், மகேந்திரனை பழிவாங்க திட்டம் போடுகிறார். இறுதியில் தாசரதி நரசிம்மன், மகேந்திரனை பழி வாங்கினாரா? தாசரதி நரசிம்மனிடம் இருந்து மகேந்திரன் தப்பித்தாரா?? இதற்கும் அமிகோ கரேஜ் க்கும் என்ன சம்பந்தம் என்பதே மீதிக் கதை….
படத்தில் நாயகனாக வரும் மகேந்திரன் ஆக்சன் காட்சி களில் தூள் கிளப்புகிறார்..காதல் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்…

நெகடிவ் ரோலில் நடித்திருக்கும்
தாசரதி நரசிம்மன் இவரின் உடலமைப்பு, பார்க்கும் பார்வை அந்த ரோலிற்க்கு கச்சிதமாக அமைய, இவர்களுக்கு ஈடு கொடுத்து சிறப்பாக நடிச்சிருக்காரு கேரேஜ் ஓனர் ஜி.எம்.சுந்தர்…
நாயகிகளாக வரும் ஆதிரா ராஜ் மற்றும் தீபா பாலு, வரும் இடங்கள் குறைவு…இருந்தும் குடுத்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர்..
பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக வும், படத்தின் முதல் பாதி பின்னணி இசையால் வேகமாக செல்ல..இரண்டாம் பாதி வேகம் குறைவு. விஜயகுமார் சோலை முத்து வின் ஒளிப்பதிவு சிறப்பு..
நமது கோபம் நியாயமாகவே இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது..என்ற கருத்தை சொல்லியிருக்காரு இயக்குணர் பிரசாந்த் நாகராஜன்…2.5/5..