தயாரிப்பாளர் திரவ், இஸ்மத் பானு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெப்பம் குளிர் மழை’.

இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா ஆகியோர் நடித்துள்ளனர்…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளாக திரவ், இஸ்மத் பானு..
ஊர் மக்களோடு பெண்ணின் மாமியாரும் இதை சுட்டிக்காட்டி, தன் மகனுக்கு இரண்டாம் கல்யாணத்திற்கு தூபம் போடுகிறாள். இஸ்மத் தனது கணவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைக்கிறார். மருத்துவ மனைக்கு செல்வது ஆண்மைக்கு இழுக்கு எனும் ஆதிக்கம் கொண்ட கணவனோ கடவுளை நம்பு என்று மறுத்து விடுகிறார்…இதற்கிடையில் இஸ்மத் பானுவின் தாய் தவறவிட, மணம் கலங்கி போன மனைவியுடன்
மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிடலுக்கு பரிசோதனைக்கு வருகிறார். பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்ததும், கணவனின் குழந்தை ஆசை க்காக, நவீன மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமாகி குழந்தை பெற்று கொள்கிறார். சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை கணவனுக்கு தெரிய, எழும் பிரச்சினை மற்றும் அதன் முடிவே…வெப்பம் குளிர் மழை…

திரவ் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் ஜெயித்துள்ளார். கதா பாத்திரத்திற்கு ஏற்ப சிறந்த தேர்வு..

பாண்டி யாக இஸ்மத் பானு
என்னம்மா ஒரு நடிப்பு!..
“நான் மலடியா?” மலடியா? நானா? என்று கத்தி அழும் காட்சியில், எங்கே உண்மையை போட்டு உடைத்து விடுவாளோ ? என்று நம்மை பத பதைக்க வைக்கிறார்…சிறந்த நடிப்பு.

இன்றைய சூழலில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டு, இயந்திர தனமாக அதற்காக முயலு வதும், குழந்தை தரிக்காத பட்சத்தில் மருத்துவர்களை நாடி, செயற்கை முறையால் உடனடி தீர்வு காணும் நிலைக்கு சமூகம் தள்ளப் பட்டிருக்கு என்பதை தெளிவாக சொல்லிருக்காரு இயக்குனர்…

ஷங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.. பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவில் கிராமம் அழகாக தெரிகிறது…

வெப்பம் குளிர் மழை – மிதமான சாரல்..