ஸ்வதேஷ் இயக்கத்தில் சோனா, யோகி பாபு, ஓவியா, சேசு,kpy பாலா, தங்கதுரை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பூமெர் அங்கிள்”.

சோனா விடம் சேசு தன் நண்பனான யோகிபாபு பற்றி கதை சொல்ல ஆரம்பிக்கிறாரு… யோகி பாபு தந்தை பல வருடங்கள் முன் கண்டுபிடித்த சூப்பர் மேன் ஃபார்முலாவை அபகரிக்க, யோகிபாபுவின் மனைவியான ரஷ்யப் பெண் மாய தோற்றம் கொண்ட ஓவியா வை அனுப்பி வைக்க, சில பல சித்து வேலைகளுக்கு பிறகு, யோகி பாபுவிற்கு இது புரிய.. ரஷ்ய மனைவியிடமிருந்து ஃபார்முலாவை காப்பாற்ற களமிறங்கும் யோகிபாபு, எண்ணென்ன சவால்களை சந்திக்கிறார் ?? பூமெர் அங்கிள் யார் ?? என்பதே மீதிக்கதை…

பிரமாண்டமான அரண்மனைக்குச் சொந்தக்காரராக வரும் யோகிபாபு, நண்பர்கள் சேசு, ரோபோ சங்கர், kpy பாலா ஆகியோரோடு வழக்கமான ஸ்டைலில் கொஞ்சமாய் கலகலப்பூட்டுகிறார்.

ஓவியா கவர்ச்சியாக ஆடியிருப்பதோடு, வொண்டர் வுமன் னாக தோன்றி அதிரடி ஆக்சனிலும் கலக்கியிருக்காரு…

இருக்கும் அத்தனை சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இறங்கி வந்து, குழந்தைகள் ரசிக்கும் படி, ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்காங்க…

நம் மறந்து போன, அந்தக் கால சக்திமானுக்கு வயதாகி பூமர் அங்கிளாக எம்.எஸ். பாஸ்கர் தோன்றி யோகி பாபு விற்கு அரண்மனையை காப்பாற்று உதவிகிறார்…

ரஷ்யப் பெண், அவருக்கு அசிஸ்டன்டாக வருபவர் என மற்றவர்களின் நடிப்பு ஓகே ரகம். சீனியர் நடிகை சோனாவுக்கும் சிம்பிளான ஒரு கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சுபாஷ் தண்டபாணி..

இயக்குனர் ஸ்வதேஷ் படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் பார்க்காதீர்கள் என சொன்னதால் நாமும் லாஜிக் பார்க்காமல்…படம் பார்க்கலாம்…