மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கி அமீர் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம். “உயிர் தமிழுக்கு”..

இப்படத்தில் அமீருடன் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர்.

இசை – வித்யாசாகர்

சென்னையில் ஒருநாள் அதிகாலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சி யை சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீரின் மேல் கொலை பழி விழ, அதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார்.

தான் காதலிக்கும் தமிழ் செல்வி (சாந்தினி) யிடம் தான் நிரபராதி என் எவ்வளவு எடுத்து கூறியும் நம்ப மறுக்கும் சந்தினி யிடம்
தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும்..

கேபிள் டிவி நடத்தும் பாண்டியனாக அமீர், காதலி சாந்தினிக்காக அரசியலுக்குள் நுழைந்து, காதல் அரசியல் பண்ணுகிறார்…எதிர்க்கட்சி தலைவராக வரும் ஆனந்தராஜ் ஐ வம்புக்கு இழுப்பதிலும் சரி சாந்தினி யை காதலிக்கும் இடத்திலும் இளமையாக தெரிகிறார்…

சாந்தினி ஶ்ரீதரன் அழகாக தெரிவதுடன்…நடிக்கும் ஸ்கோப் குறைவாக இருந்த போதிலும், நிறைவாக செய்திருக்கிறார்…

சமகால அரசியலை கிண்டல் செய்து அத்தனை விஷயங்களையும் உள்ளே புகுத்தி, குறிப்பாக ஆன்மீக அரசியல் இருக்கலாம், ஆத்மா அரசியல் இருக்க கூடாதா ? என்று நையாண்டி யை புகுத்தியிருக்கிரார் இயக்குனர்…

அரசியல் நெடி கலந்த காதல் கதை.. பி அண்ட் சி ஏரியாக்களில் கல்லா கட்டும்..