

மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’…
சித்த மருத்துவராக கொடைக்கானல் -ல் பணியாற்றும் ஹீரோ வாக அர்ஜுன் தாஸும், ஹோட்டல் ஒன்றில் மேனேஜர் ஆக பணியாற்றும் ஹீரோயின் தன்யா ரவிச்சந்திரனும் காதலிக்க, மதுரை யில் இருந்து கொடைக்கானலுக்கு மாற்றலாகி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஷங்கர்.. இவர்களின் காதலை பார்த்து பொறாமைப்பட்டு அவ்வப்போது இவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்.
எதனால்? என்பதை பிளாஷ்பேக் மூலம், படம் சொல்கிறது…
அர்ஜூன் தாஸ் நடித்த அவரின் முந்தைய படங்களான அநீதி , போர் ஆகியவற்றில் காதல் காட்சிகள் இருந்த போதிலும், அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத, ஆடியன்ஸ் மனதளவில் ஒட்டாமல் அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கத்தினை தவிர்த்து காதல் காட்சிகளில் நடித்திருக்கிறார் அர்ஜூன்தாஸ்..
சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் சுஜித் சங்கர் தன் நடிப்பால், அவ்வப்போது ஒரு வித மனரிசத்தோடு கொட்டாவி விட்டு, அனைவரையும் பயமுறுத்தி உள்ளார்.
இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன்,
ரேஷ்மா வெங்கடேஷ், என்ற இரு கதாநாயகிகள் நடித்திருந்தாலும், தான்யா வை விட நடிப்பில் அதிக அளவு ஸ்கோர் செய்திருப்பது ரேஷ்மாதான். பாடல் வரிகள் அல்லாத இசையை கொண்டு வரும் பாடலில் இவர் ஆடும் ஆட்டம் அத்தனை அழகு…
சுட்டி பெண்ணாகவும் சரி, கணவனிடம் மாட்டிகொண்டு முழிப்பதிலும் சரி, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்…
படத்தின் ஆரம்ப கட்சியில் வரும் பின்னணி இசை, நம்மை இசை யார் என்று கேட்க வைக்கிறது .. கதை க் கு ஏற்ப அத்தனை துல்லியமாக ரசிக்கும்படியாக இசையமைத்துள்ளார் தமன் சேதுவின் சிறப்புச் சப்தமும்தான் இணைந்து படத்திற்கு பலம் சேர்த்து இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது…
மொத்தத்தில்
“ரசவாதி”சாந்த குமாரின் முந்தைய படங்களில் இருந்து தனித்துவம் வாய்ந்த ஒன்று..