
நல்ல கதைகளை இவர் தேர்வு செய்து நடிக்கிராறா?? இல்லை, நல்ல கதைகள் இவரை வந்து சேருகிறதுதா என்ற அளவுக்கு விதார்தின் படங்கள் இருக்கும்..
அந்த வகையில இப்போ வெளி வந்திருக்கும் படம் தான் அஞ்சாமை..
இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த்,வாணி போஜன்,ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, 2017 இல் நடந்த உண்மை சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெளிவா சொல்லியிருக்காங்க..
பூ வியாபாரியாக வரும் விதார்த், தன் மகன் மருத்துவ னாக வரவேண்டும் என்று கடனை வாங்கி படிக்க வைக்க முயலுகையில், மதுரையில் இருக்கும் மாணவனை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை வட இந்தியா வில் இருக்கும் ஜெய்பூர் இல் போட, படாத பாடு பட்டு அங்கு சென்று ஒருவழியாக மகன் தேர்வு எழுதும் வேளையில், ஏற்கனவே மனசோர்வுடன், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ள, விதார்த் இறக்க நேரிடுகிது…இத்தனைக்கும் காரணம் இந்த அரசு தான் என மகன் (கிருத்திக் மோகன்)கேஸ் போட அது கோர்ட் க்கு வருகிறது… விதற்த்தின் மகனுக்காக வாதாடும் வக்கீலாக வரும் மாணிக்கம்( ரகுமான்) வாதாடி ஜெய்க்கிறாரா? என்பதே கதை….
தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஓடாய் தேயும் ஒவ்வொரு தகப்பனின் வலிகளையும் அப்படியே கண் முன் நிறுத்துகிறார் விதார்த்… சர்கார் என்ற கதாபாத்திரத்தில்
ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, கிராமத்து பெண்ணாக மிரட்டலான நடிப்பை தந்துள்ளார் வாணி போஜன்.
மகனாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் சிறப்பாக நடித்திருக்கிறார்…
பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், பெ றோர்களுக்கும் மன அழுத்தத்தை அரசாங்கம் தருது ன்னா….உங்க பிள்ளைகளின் படிப்பு தரம் வுயர நாங்கள் கோச்சிங் கொடுக்கின்றோம் என்று தனியார் கோச்சிங் சென்டர் பண்ற வியாபாரம் இருக்கே…அப்பப்பா..
ஏழை மக்களுக்கு எட்டா கனியாக திகழும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வினால் ( நீட்)
தமிழ்நாட்டு மக்கள் படும் அவலத்தையும் அதனால் பறிபோன. உயிர்களை பற்றிய பொறுப்பான கதையை படமாக இயக்கிய இயக்குனர் சுப்புராமனை மனதார பாராட்ட வேண்டும்.