
சோனியா அகர்வால்
வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன், பிர்லா போஸ்
சூப்பர் குட் சுப்ரமணி
சுமா ரங்கநாத்
பூஜாகாந்தி
முமைத்கான் ஆகியோர் நடிப்பில் வெளயாகி இருக்கும் படம் தண்டுபாளயம்…
கதை, திரைக்கதை,வசனம்
பாடல், தயாரிப்பு இயக்கம் என அத்தனை கிராப்ட் யும் கையில் எடுத்ததோடு நடித்தும் இருக்கிறார் டைகர் வெங்கட்..
இயக்கம்- கே. டி.நாயக் – டைகர் வெங்கட்..
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, அதுவும் திருட்டு, கற்பழிப்பு, கொலை என்ற கொடூரமான சம்பவங்களை அசால்டாக செய்யும்
தண்டுபாளையம் கேங் என்பது மிகப்பெரிய நெட் ஒர்க், அவர்கள் இன்றளவும் எங்காவது ஊடுருவி இருப்பார்கள் என்பதை சொல்லும் கதையே தண்டு பாளையம்..
சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் அவர்களின் உறவினர்கள் அதாவது தண்டுபலய குழுக்கள் தண்ணீர் கேட்பது போலவும், அழும் பிள்ளைக்கு பால் கேட்பது போலவும் வீடு வீடாக நுழைந்து கொள்ளையடித்தும் கற்பழித்தும் அட்டூழியம் செய்யும், அவர்களை பிடித்து சிறைச்சாலையில் அடைக்கின்றனர், இதற்கிடையில் அவர்களை சார்ந்த மற்ற கும்பல், அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க அதே ஃபார்முலா வை கையாள்கிறது..
ஒரு கட்டத்தில், அவர்களை போலீஸ் அதிகாரி என்கவுண்டர் செய்ய, அவரது கும்பத்தை பழி வாங்க, அவர்களது வாரிசுகள் கிளம்புகிறது … பழி வாங்கினார்களா? இல்லையா என்பதே மீதி கதை…
சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் அந்த கதா பாத்திரங்களாகவே மாறி நம்மளையும் அச்சுறுத்தும் அளவுக்கு நடித்துள்ளனர்… போலீஸ் அதிகாரி யாக வரும் டைகர் வெங்கட்..தனக்கான நடிப்பை வழங்கியிருக்காரு..
ஒளிப்பதிவு – பி.இளங்கோவன்
இசை – ஜித்தின் கே.ரோஷன்
மக்கள் தொடர்பு – வெங்கட்