

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து வெளிவந்திருக்கும் படம் ” மழை பிடிக்காத மனிதன்”.
கதை ஒரு வாய்ஸ் ஓவர் ல் அந்தமானில் தொடங்குகிறது.. ஏஜென்ட் சரத்குமார் தன் தங்கையை விஜய் ஆண்டனி க்கு திருமணம் செய்து தர, அவர்கள் இருவருமே ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த, சூழலில் எதிர்பார்க்காத விதமாக விஜய் ஆண்டனியின் எதிரிகள் அவருடைய மனைவியை கொலை செய்து விடுகிறார்கள். அவர் மனைவி இறந்தபோது மழை பெய்து இருந்ததால் விஜய் ஆண்டனி க்கு மழையை கண்டால் வெறுப்பு. அதேசமயம் எதிரிகள் விஜய் ஆண்டனியை யும் கொல்ல திட்டமிட, அவரை காப்பாற்றி தெரியாத இடமான அந்தமானுக்கு அழைத்து சென்று புத்திமதி சொல்லி விட்டுவிட்டு செல்கிறார்…
அதற்குப் பின் என்ன நடந்தது? விஜய் ஆண்டனி தன் மனைவியை கொன்றவர்களை பழி வாங்கினாரா? விஜய் ஆண்டனியின் வாழ்க்கை எப்படி மாறியது? அவருடைய மனைவியை கொலை செய்ததற்கு காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை…
விஜய் ஆண்டானி வழக்கம் போல நடிக்க, அவருடன் ஒரு நாய் குட்டி யும் நடிசிருக்கு…மழை பிடிக்காத விஜய், மழையில் நினைந்து, நாய் குட்டி யை காப்பாற்றி, அதே நாய்க்குட்டி க்காக, வில்லனின் காலை உடைப்பது, பொயடிக்…
மேகா ஆகாஷ், கன்னட நடிகர் தனஞ்செயன், மற்றும் ரமணா ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிச்சிருகாங்க..சரத்குமார் மற்றும் சத்யராஜ் இருவருக்கும் படத்தில் பெரிதளவில் ஸ்கோப் இல்லையென்றாலும், அடுத்த பாகத்தில் இருக்குமோ?
ஆக மொத்தத்தில் “மழை பிடிக்காத மனிதன்” வேகம் சற்று குறைவு…