ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்கான “அந்தகன் படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்க, பிரசாந்த் கதாநாயகனாக நடித்து தற்போது வெளியாகியிருக்கு…

இப்படத்தில் பிரசாந்த் க்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், இவருடன் ஊர்வசி யோகிபாபு ஆகியோர் நடிசிருகாங்க…

டாப்ஸ்டார் பிரஷாந்த் ஒரு பியோனோ ஆர்டிஸ்ட் ஆக பார்வையற்றவராக, நடந்து வர ஒரு ஆக்ஸிடென்ட் ல் ப்ரியா ஆனந்த் ன் நட்பு கிடைக்க, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரின்
ரெஸ்டோ பாரிலேயே ஒரு வேலை பிரஷாந்த்துக்கு கிடைக்க, இதில் வரும் வருமானம் வைத்து லண்டன் போக முயற்சி செய்து வருகிறார், அவரின் லட்சியமும் கூட…அந்த நேரத்தில் நடிகர் கார்த்திக் கின் அறிமுகம் பிரஷாந்துக்கு
கிடைக்கவே, தனது மனைவியான(சிம்ரன்) கு திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் கிஃப்ட் செய்ய நினைத்து, பிராசந்தை வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு வந்து பார்த்த பிராசாந்திற்கு ஒரு கடும் அதிர்ச்சி.கார்த்திக் அங்கு இறந்து கிடக்க, சமுத்திரக்கனி மற்றும் சிம்ரனும் இணைந்து அந்த கொலையை மறைக்க முயல, பார்த்தும் பாராதது போல அதாவது பார்வை இழந்தவராக நடிக்கும் பிரஷாந்திற்கு பேரதிற்சியாகிறது..இதன் பிறகு நடக்கும் சம்பவங்களை,பதட்டத்துடன், நம்மளை யும் பதட்டமாக்கி சுவாரஸ்யம் இமி அளவும் குறையாமல் மீதிக்கதை யை கொடுத்திறுக்காரு இயக்குனர் தியாகராஜன்…

பார்வையற்றவராக அத்தனை யதார்த்தமாக நடித்திருக்கிறார் டாப்ஸ்டார் பிரசாந்த்..அதிலும் கார்த்திக் இறக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை பார்த்தும் பார்க்காதது போல் அத்தனை துல்லியமான நடிப்பை குடுத்து அசத்தியிருக்காரு… டாப் ஸ்டார் டாப்ஸ்டார் தான்..

அடுத்ததாக, படத்தில் கலக்கியிருப்பது சிம்ரன். இதுவரை அழாகன சிம்ரனை பார்த்த நாம், இறுதி காட்சியில் நரம்பு புடைக்க, கொடூர வில்லியாக, அட்டகாசமான நடிப்பை கொ டுத்திருக்காரு.. ஊர்வசி, யோகிபாபு, கே எஸ் ரவிகுமார் என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில், அந்தகன் மாஸ் த்ரில்லிங் என்டர்டெயின்மென்ட் படம்…