
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்து
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில், இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான்.
நில உரிமையை பற்றி பேசி இருக்கும் படம் “தங்கலான்”
கதாநாயகன் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி, (பூ பார்வதி)பிள்ளைகள் மற்றும் மக்களுடன் சொற்ப நிலத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்.
வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் இருக்கும் மிராசுகள், அவர்களின் கீழ் வாழும் மக்கள் அனைவரையும் அடிமைபோல் நடத்தி வர, தங்கலாநுடைய நிலத்தின் போகம் அதிக விளைச்ச லை தர, அது பொறுக்காமல் விளைச்சலுக்கு சிலர் தீ வைக்கின்றனர், நிலத்தை இழந்து வாடும் தங்கலா னுக்கு, அவரின் பின் வரும் சந்ததி னரும் அடிமைகளாக வாழ வேண்டும் என்று வறை முறை அற்ற, சட்டத்தை விதிக்க, அதனை எதிர்த்து போராடுகிறார்…இந்த நிலையை மாற்றி தனது ஊரின் மக்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லவேண்டும் என நினைக்கிறார் விக்ரம். வெள்ளைக்காரன் Clement மூலம் தங்கம் தேடும் வேலை கிடைக்கவே, அதன் மூலம் வருவாய் ஈட்டி, மிராசிடம் இருக்கும் தங்களின் நிலங்களை மீட்டு விடலாம் என எண்ணி தனது மக்களை தங்கம் தேடும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்
இதன்பின் என்ன நடந்தது? அங்கு அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன ? நிலம் யாருக்கு சொந்தம் என்று அரசியல் பேசி முடித்திருக்கிறார்..இயக்குனர் பா.ரஞ்சித்
விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ் கர் விருதே வழங்கினாலும் அதுவும் குறைவு தான் என்று சொல்லும் அளவிற்கு அவரின் நடிப்பு வெறித்தனமாக இருக்கிறது.
பார்வதி, பசுபதி, மாளவிகா, Daniel Caltagirone என அனைவரும் நடிப்பில் செஞ்சுரி அடிக்க, அப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் அருமை யான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..
இப்படத்தின் மற்றொரு ஹீரோ இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான். இரண்டு பாடல்கள் தனது பின்னணி இசையால் மிரட்டிவிட்டார்.
தங்கலான் – மின்னும் பொன்..பூர்வ குடியை அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு…