
பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய, மாரி செல்வராஜ் அடுத்து இயிக்கியிருக்கும் படம் ” வாழை”..இப்படத்தை திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்க, ரெட் ஜெயண்ட் நிறுவணம் வெளியிட்டிருக்கு..
1999 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நலிந்த குடும்பத்தை சார்ந்த தந்தையை இழந்து தாய் தமக்கை யுடன் கூலி வேலை செய்யும் சிறுவன் சிவனைந்தன்.
பள்ளி சிறுவனான அதே சமயம் கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தம், பள்ளி படிப்பில் முதலாவதாக வருவதால், பள்ளியில் சேட்டை செய்தாலும், சில சலுகைகள் கிடைக்கின்றன..அந்த பருவத்தில் பள்ளி ஆசிரியை யாக வரும் பூங்கொடி டீச்சர் மீது பாசம் வர, தனது அக்கா அம்மா போல் பாவிக்கிரார். பள்ளி பருவத்தில் வரும் அவனது ஆசைகள் குடும்ப சூழலால், தடுக்கப்படுகிறது.. அவ்வாறு ஒரு நாள் அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத நாளில் நிகழும் சம்பவம் தான் வாழை படத்தின் கதை…
சிவநைந்தம் அழகான தேர்வு. பசியோட அவர் அலையும் அலைச்சலில், நடிப்பால் நம் கண்களை கலங்க வைக்கிறார். அவரின் நண்பராக வரும் சேகர் “நாங்கல்லாம் கமல் ரசிகர், முள் குத்தாமலயே குத்தின மாதிரி நடிப்போம்னு அவர் பண்ற அலப்பலில் தேட்டரில் குபீர் சிரிப்பு…
படத்தின் ஆசிரியையாக வரும் நிகிலா விமல் அசத்தலாக நடித்துள்ளார். படம் பார்க்கும் ஓவ்வொரு நபருக்கும், அவர்களுக்கு பிடித்த டீச்சர் நினைவில் வந்து போவது உறுதி. குறிப்பாக, பஞ்சுமிட்டாய் சீலை கட்டி பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் நம்மையும் ஆட்டம் போட வைக்கிறது.
வேம்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி ஒரு பாசமான அக்காவாக அருமையாக நடித்திருந்தார். கனி யாக வரும் கலையரசன், உணர்ச்சி மிக்க போராளி யாகவும், காதல் அரும்பும் இடங்களிலும் மிதமான நடிப்பு…
படத்தின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியே படத்தின் பெரும் பலம்.. பள்ளி ஆண்டு விழாவிற்கு நடனம் ஆட ஒத்திகை பார்க்கச் செல்லும் சிவனைந்தம் எதிர்கொள்ளும் சிக்கலும், அதேசமயம் அங்கே ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அளவுக்கு நிகழும் மற்றொரு சம்பவமும் நம் மனதை ரணமாக்குகிறது.
குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சி யாருமே எதிர்பாராதது. பலரையும் கனத்த இதயத்துடன் கண்ணீரில் நனைய வைத்த “வாழை” ஒரு படையல்…