ஜித்தின் லால் இயக்கத்தில் டொவினோ தோமஸ், கிர்த்தி ஷெட்டி, பெஸில் ஜோஸப், ஐ ஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ARM”…

திருட்டில் கெட்டிகாரனாக இருக்கும் அஜயணின் கதையை பாட்டி ஒருவர் தன் பேத்திக்கு கதையாக சொல்ல தொடங்குகிறார்..1900களில் ஹரிபுரம் என்ற ஊரில் விண்கல் ஒன்று விழ, அதனை அறிந்த அரசர் தனது சமஸ்தானத்திற்கு எடுத்துச் சென்று, அந்த கல்லுடன் சில உலோகங்களை சேர்ந்து அற்புத விளக்கு சிலை ஒன்றை செய்கிறார். ஒரு சமயம் ஆபத்தில் இருக்கும்
அரசருக்கு குஞ்சிகெலு (டொவினோ தாமஸ்) பேருதவி செய்ய, அதற்கு பிரதி பலனாய் அந்த விளக்கு சிலையை தருமாறு கேட்டு வாங்கி, அவரது ஊருக்கு கொண்டு செல்கிறார்
டொவினோ தாமஸ்… அந்த சக்தி வாய்ந்த சிலை யும் ஒரு நாள் களவுபோக, அதனை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் அஜயன். அவரை சிக்க வைத்தவன் யார்? அவனுக்கும் சிலைக்கும் என்ன தொடர்பு ??அந்த சிலையின் பின்னணி என்ன? அதனை கதாநாயகன் அஜயன் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் கதை.

மூன்று வித கதாபாத்திரங்களிலும் வேறுபாட்டினை காட்டி அசத்தியிருக்கிறார். டொவினோ… குறிப்பாக மணியன் கதாபாத்திரத்தில் பேய்த்தனமான நடிப்பை காட்டியிருக்கிறார்.அவரின் உடற்கட்டிற்கும் நடிப்பிற்கும் துணை சேர்த்திருக்கு சண்டை காட்சிகள்…அவரது மனைவியாக வரும் மாணிக்கம் (சுரபி லக்ஷ்மி) நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள் தான். தொய்வில்லாத திரைக்கதை யை அமைத்து, அதற்கு ஈடான இசையினை வழங்கியிருக்கிறார் திபு நினான் தாமஸ்….இருட்டிலும் கிராமத்தை அழகாக தனது ஒளிப்பதிவினால் படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஜோமொன் டி. ஜான்…ARM கேரளாவில் கல்லா கட்டும்…