இயக்குனர் எஸ்.ஏ.தனா இயக்கத்தில் விஜய் ஆன்டணி, கௌதம் வாசுதேவ் மேனன் ரிய சுமன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஹிட்லர்’

இசை – விவேக் – மெர்வின்

தேனி மாவட்ட மலை கிராமத்தில் மழையில் ஆரம்பித்த கதை, அடுத்து சென்னையில் தொடங்குகிறது…
தமிழ்த் திராவிட சமுதாயக் கட்சியின் அமைச்சர் (சரண் ராஜ்) ஊழல் வழக்கில் சிக்கித் தேர்தலில் தோற்கும் நிலைமை உருவாக, மந்திரியிடம் தான்எப்படியும் தேர்தலில் பணம் கொடுத்தாவது வென்றுவிடுவேன்' என்று சபதம் எடுக்கிறார்....தனது தம்பி தமிழிடம், அதற்கான பணிகளை கொடுத்து முடுக்கிவிடுகிறார். ஆனால் அந்தப் பணம் கைமாறும் நேரத்தில் திருடப்பட்டு, அவரது கூட்டாளிகள் மர்மநபர்களால் சுட்டு கொல்லப்படுகிறார்கள். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக கௌதம் வாசுதேவ் மேனன். வர, இதற்கிடையில் ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் விஜய் ஆண்டனி இந்த ரயிலில் சந்திக்கும் ரியா சுமனை காதலிக்க, சம்பவம் அன்று, ரயிலுக்குள் இருக்கும் பணப்பெட்டி காணாமல் போக, கௌதம் வாசுதேவ மேனன் பார்வை விஜய் ஆண்டனி மேல் செல்ல, திருட்டு போன பணம் கிடைத்ததா, கண்டுபிடித்தாரா? என்பதேஹிட்லர்’ படத்தின் கதை.

விஜய் ஆண்டனி, வழக்கம் போல், காதல் காட்சிகளில் நடித்தாலும் ஒட்ட மறுக்கிறது,, ஆக்சன் காட்சிகளில் தேருகிறார்..

படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு மிரட்டலான போலீஸ் அதிகாரியாக வந்து போகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்..

ரியாசுமன் கண்களுக்கு அழகாக தெரிகிறார்..மற்றபடி விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, தமிழ் ஆகியோர் குடுத்த கதா பாத்திரங்களுக்கு ஏற்ப நடிச் சிருக்காங்க…

தலைப்புக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மெதுவாக தொடங்கி இரண்டாம் பாதியில் வேகமெடுக்கிறது…நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்திருக்கு “ஹிட்லர் “