
பிறப்பின் படைப்பு…ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் பாதிப்பால் வேறு பாலினத்தவராக மாறும் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய கதையை வலிகளோடும் வேதனைகளோடும் சொல்லியிருக்கிறார் சம்யுக்தா விஜயன், “இவள்” முதன்மை வேடத்தில் நடித்ததுடன், படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.
ஆண், பெண், என்று பிறப்பால் வரையறுக்கபட்டாலும், பருவ மாற்றத்தில் ஏற்படும் சில ஹார்மோன் கோளாறுகளால், சிலரை திருநங்கையாகவோ, திரு நம்பியாகவோ பார்க்கும் இந்த சமூகம் அவர்களை பெண்ணாக வோ, ஆணாகவோ முழு மனதுடன் சமூகத்தில் அங்கீகரிப்பதில்லை. அப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்படும் கதையின் நாயகனான அரவிந்த், பானுவாக மாற்றம் அடைவது எப்படி?, அதை அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பது மட்டுமல்லாமல் அவர்களை நடத்தும் விதம், மேலும் வலியோடு அதை அவர்கள் கடந்து செல்லும் பாதை யை இதயம் கனக்கும் படி சொல்வதே ‘நீல நிற சூரியன்’.
அரவிந்த் மற்றும் பானு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன் திரைக்கதையில் கூடுதல் கவனத்தோடு திரை ஆக்கம் செய்திருக்கிறார்..பல படங்களில் இவர்களின் வலியை சில இயக்குனர்கள் சொல்லியிருந்தாலும், சம்யுக்தா இதில் தான் சொல்ல வந்த விஷயத்தை மிகைபடாமல் சொல்லியிருப்பதே சிறப்பு..
ஸ்டீவ் பெஞ்சமின்…இவரின்
ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு இப்படத்திற்கு பலம்.. சமூக கட்டமைப்பு சிறிதேனும் மாற, அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம் “நீல நிற சூரியன்..’