
ஜி. பி.ரவிகுமார், சின்ட கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரிக்க, நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் திரு.மாணிக்கம்
இப்படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், ஆகியோர் நடித்துள்ளனர்..
நாயகன் சமுத்திரகனி, மனைவி அனன்யா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் குமுளி பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வாழ்ந்து வருகிறார்..ஒரு நாள் முதியவரான பாரதிராஜா தன் மகள் நிறை மாத கர்ப்பிணியாக , கணவரின் குடும்பத்தாரால் துரத்தப்பட்டு வீட்டில் இருக்க, மேலும் நோயாளி ஆன மனைவியையும் நினைத்து கண்கலங்கி நிற்கிறார்…அப்படி இருக்க எதிரில் இருக்கும் லாட்டரி டிக்கெட் கடையில் லாட்டரி வாங்கி, அது அடித்தாவது தங்களின் குடும்ப கஷ்டம் தீராதா என்ற ஏக்கத்தோடு லாட்டரி வாங்க பணம் கொடுக்கையில் பணத்தை எங்கோ தவற விட்டுவிட்டதை நினைத்து கண்கலங்குகிறார், இதனை அறிந்த சமுத்திரக்கனி யும..பணம் பிறகு தாருங்கள், டிக்கெட் உங்களது தான் எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லி யம், பாரதிராஜா பிறகு வாங்கி கொள்கிறேன் என்று சென்று விடுகிறார்…அந்த லாட்டரி க்கு ஒன்றரை கோடி விழவே, அதனை அந்த பெரியவரிடம் கொடுக்க, அவரை தேடி செல்கிறார்…இதனை அறிந்த சமுத்திரக்கனி யின் மணைவி மற்றும் அவரது குடும்பத்தார்கள் அனைவரும் தடுக்க, அதனை மீறி சமுத்திரக்கனி அந்த லாட்டெரி யை பாரதி ராஜா விடம் ஒப்படைத்தாரா ? என்னென்ன இடையூறுகள் ஏற்பட்டது ?? என்பதே மீதக்கதை….
ஒரு மனிதன் எவ்வளவுதான் நேர்மையாக நடந்தாலும், குடும்ப சூழ்நிலைகள் அவனை எவ்வளவு படுத்துகிறது என்பதனை கூறியிருக்கிறார் இயக்குனர்…அதையும் மீறி நேர்மையாக இருப்பின் கடவுள் ஒரு போதும் நம்மளை கை விட மாட்டார் என்பதே நீதி..
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணியை இசை படத்திற்கு பக்க பலம்.. சுகுமாரின் ஒளிப்பதிவில் குமுளி மற்றும் கேரள பகுதிகள் அழகு..
மொத்தத்தில் திரு.மாணிக்கம் மனிதருள் மாணிக்கம்…