
ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில்,
தனக்கான 150 படத்தினை, சிரத்தையுடன் தேர்ந்துடுத்து, சிதம்பரம் நெடுமாறன் என்ற
மிடுக்கான காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்க, இவருடன் ஶ்ரீகுமார் இனியா, சிஜா ரோஸ், ஜார்ஜ் மரியான், பேபி ஆழியா நடித்து வெளி வந்திருக்கும் படம் “தி ஸ்மைல் மேன்”
கோவையில் காவல் துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்து ஏற்பட, அல்சைமர்ஸ்' என்னும் மறதி நோய் உண்டாகிறது. இதனால் மருத்துவர் ஒருவரின் கன் கானிப்பில் இருக்கிறார் ..அவ்வப்போது நடக்கும் விஷயங்களை மறக்காமல் இருக்க ரெக்கார்டர் மூலம் பதிவேற்றம் செய்து, அவ்வப்போது நினைவு கூர்கிறார்...இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும் என்ற நிலை யில்
ஸ்மைல் மேன்’ எனப்படும் சீரியல் கில்லரால் தொடர் கொலைகள் நடக்க, அதனை சில ஜூனியர் அதிகாரிகள் இவரின் உதவியை நாடுகின்றனர்…அதில் முக்கியமான அரவிந்த் (ஸ்ரீகுமார்), ன் அப்பாவிற்கும் இவருக்கும் ஏற்கனவே வேலை நிமித்தமாக ஒரு தொடர்பு இருக்க, அது என்ன?? தொடர் கொலைகள் செய்த குற்றவாளியைப் பிடித்தனரா ?? இல்லையா என்பதே…. “தி ஸ்மைல் மேன்”
இரண்டாம் நாயகனாக வரும் ஶ்ரீ குமார் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நடிதிருக்கலாம்…நடித்தவரை நிதானமாக அளந்து நடிச்சிருக்காரு..
பேபி ஆழியா, ஜார்ஜ் மரியான், இனியா குடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிச்சிருக்காங்க…
சீரியல் கில்லராக வரும் கலையரசன் இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆக நடித்திருக்கலாம்..