S3 Cini Media
தண்டேல் – விமர்சனம்

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் மீண்டும் ஒரு காதல் கதை, தண்டேல்.சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்க, இசை தேவி ஶ்ரீ பிரசாத்.. நாக சைதன்யா ( ராஜு) சாய் பல்லவி மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ்…

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது.‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது.…

நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!

நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல என்பது ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது!…

‘தண்டேல்’- ஒரு காதல் கதை தான் – நாக சைதன்யா

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் ‘தண்டேல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மீனவ…

காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர் .இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ்,, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ். பி. ராஜா சேதுபதி மேற்கொள்ள கலை இயக்கத்தை மகேஷ் நம்பி கவனித்திருக்கிறார். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும்  குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். ஈ.  ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.  வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் சா. காத்தவராயன், கலை இயக்குநர் மகேஷ் நம்பி,  நடிகர்கள் அனு மோகன், ரவி மரியா, மதுரை குமார்,  ஓ எ கே சுந்தர், வையாபுரி, சிசர் மனோகர், சி என் ரங்கநாதன், கஜேஷ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன்,  இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஃபைவ் ஸ்டார் செந்தில், தயாரிப்பாளர்கள் எஸ். கதிரேசன், கே. ராஜன், இயக்குநர்கள் பி. வாசு, கே. பாக்யராஜ் இவர்களுடன் ‘காமெடி கிங்’ கவுண்டமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் காமெடி கிங்’ கவுண்டமணி பேசுகையில், ”அனைவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜனும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.  இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம்.‌ படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி.  இயக்குநர் பி. வாசுவிற்கும் நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி.‌ தயாரிப்பாளர் கே .ராஜன் என் நண்பர் தான். அவருக்கும் என் நன்றி.‌  இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை நன்றாக பாருங்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள்.  பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட. இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்து கொள்கிறேன், வணக்கம், நன்றி,” என்றார்.

அது வாங்குனா இது இலவசம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகை நமீதா

ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன்,…

*மோகன்லாலின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத்…

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல்…

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத்

தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின்…

Other Story